தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய பெண் - காதலனுடன் சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறாக இருந்த கணவரை,  மனைவியே திட்டமிட்டு கொலை செய்திருக்கிறார். வேன் மோதி விபத்துக்குள்ளானதாக நாடகமாடிய காதலர்கள் போலீசில் பிடிபட்டது எப்படி ? 

Written by - Gowtham Natarajan | Last Updated : May 30, 2022, 01:53 PM IST
  • ரகசிய காதலனுடன் ஊர் சுற்றிய பெண்
  • தகாத உறவை கண்டித்த கணவர் கொலை
  • காதலனை வைத்து தீர்த்துக்கட்டிய கொடூரம்
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய பெண் - காதலனுடன் சிக்கியது எப்படி? title=

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசூர் குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். யூடியூப் சேனல் வைத்து நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாலையில் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்து போனார். விபத்து என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய, உறவினர்களுக்கு சொல்லி அனுப்பி சடலம் அடக்கம் செய்யப்பட்டது. எல்லாம் முடிந்துபோனது என்று நினைத்து கொண்டிருக்கும் போது, லோகநாதனின் இறப்பில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பங்களாபுதூர் காவல் நிலையத்தில் லோகநாதனின் தந்தை புகாரளித்தார். விபத்தில் இறந்தவரின் மரணத்தில் அப்படி என்ன மர்மம் இருக்கும் என்ற சந்தேகத்துடன் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அதில் கிடைத்த திடுக்கிடும் தகவலால் போலீசார் அதிர்ந்து போனார்கள். 

murder,erode husband murder,erode lokeshwaran murder,lokeshwaran murder,Erode mageshwari murder,mageshwari,mageshwari arrest Crime,Murder,Husband,Wife,Youtube,ஈரோடு கொலை, ஈரோடு மகேஸ்வரி,ஈரோடு ,மகேஸ்வரி கொலை,குள்ளம்பாளையம், லோகநாதன், லோகநாதன் கொலை,தாகத உறவ

லோகநாதன் இறப்பு ஒரு விபத்தல்ல, திட்டமிட்ட கொலை... அவரை கொலை செய்தது வேறுயாருமில்லை. ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்துகொண்ட அவரது மனைவிதான். காதல் கணவரை கொலை செய்யும் அளவுக்கு அப்படி என்ன வெறி அவருக்கு ... எல்லாம் தாகத உறவுதான். 

murder,erode husband murder,erode lokeshwaran murder,lokeshwaran murder,Erode mageshwari murder,mageshwari,mageshwari arrest Crime,Murder,Husband,Wife,Youtube,ஈரோடு கொலை, ஈரோடு மகேஸ்வரி,ஈரோடு ,மகேஸ்வரி கொலை,குள்ளம்பாளையம், லோகநாதன், லோகநாதன் கொலை,தாகத உறவ

சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லோகேஸ்வரனின் மனைவியான மகேஸ்வரி வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த கௌரிசங்கர் என்பவருடன் மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பழகியவர்கள் போக போக நெருங்கி பழகினார்கள். ஒரு கட்டத்தில் அது தகாத உறவாக உருவெடுத்தது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டும் கிடைக்கும் நேரத்தில் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தும் வந்தனர். இதனால் கணவரின் மீதான மகேஸ்வரியின் காதல் மெழுகு போல கரைந்து போனது.

murder,erode husband murder,erode lokeshwaran murder,lokeshwaran murder,Erode mageshwari murder,mageshwari,mageshwari arrest Crime,Murder,Husband,Wife,Youtube,ஈரோடு கொலை, ஈரோடு மகேஸ்வரி,ஈரோடு ,மகேஸ்வரி கொலை,குள்ளம்பாளையம், லோகநாதன், லோகநாதன் கொலை,தாகத உறவ

மனைவியின் நடத்தையில் மாற்றங்கள் கண்டுபிடிக்க ஒரு கட்டத்தில் அவரின் தகாத உறவு லோகநாதனுக்கு தெரியவந்தது. ஆதங்கப்பட்டு ஆக்ரோஷபட்டவர் மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனால், மகேஸ்வரி எதற்கும் அஞ்சியபாடில்லை. காதல் கண்ணை மறைக்க, சிறகடித்துப் பறந்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட, இறுதியில் மகேஸ்வரி விபரீத முடிவை கையில் எடுத்தார். ரகசிய காதலனை வைத்து கணவரை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டிருக்கிறார். லோகநாதனை கொன்றுவிட்டால் தாமும் அடிக்கடி உல்லாசம் அனுபவிக்கலாம் என நினைத்த கெளரிசங்கர், உடனே அதற்கான வேலையில் இறங்கியிருக்கிறார். 

மேலும் படிக்க | காதல் மனைவியுடன் வாழ விடாத மாமியாரை போட்டு தள்ளிய மருமகன்!

சம்பவத்தன்று டூவிலரில் மனைவியை வேலைக்கு அழைத்து சென்ற லோகநாதனிடம், உன்னிடம் பேச வேண்டும் என்று நிறுவனத்துக்குள் அழைத்து சென்றிருக்கிறார்,கெளரிசங்கர் . அங்கு ஏற்கனவே செட் செய்து வைத்திருந்த நண்பர்கள் இருவரின் உதவியுடன் லோகநாதனை கல்லால் தாக்கி துடிதுடிக்கக் கொலை செய்திருக்கிறார். பின்னர் உடலை நிறுவனத்தின் வேனில் எடுத்து கொண்டு சிறிது தூரம் சென்றவர் வேன் மோதி விபத்துக்குள்ளான மாதிரி சித்தரித்திருக்கிறார்கள். இதைத்தான் ஊரே நம்பியது. எப்படியோ போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் எல்லாம் வெளிவர, கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகேஸ்வரி, அவரது காதலன் கெளரிசங்கர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலனுடன் உல்லாசம் அனுபவிக்க, கணவரை திட்டமிட்டு மனைவி தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | பயங்கர சண்டை... தடுக்க போனது குற்றமா... அடித்து கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News