”அதிமுக-வை பழிவாங்க துடிக்கிறது திமுக” - ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக நிர்வாகிகளை திமுக அரசு அரசியல் ரீதியாக பழிவாங்குவதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Mar 15, 2022, 04:35 PM IST
  • எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு
  • இபிஎஸ் - ஓபிஎஸ் கண்டன அறிக்கை
  • அரசியல் பழிவாங்கல் என குற்றச்சாட்டு
”அதிமுக-வை பழிவாங்க துடிக்கிறது திமுக” - ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை title=

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம்  எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு விசாரணை அடுத்த வாரம்- Madras HC

EPS-OPS Statement

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தலில் திமுக-வினர் மேற்கொண்ட முறைகேடுகளை எஸ்.பி.வேலுமணி எதிர்த்ததற்காகவே இந்த சோதனை நடத்தப்படுவதாகவும், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம்  உள்ளிட்டோரை  குறிவைத்து திமுக அரசு பழிவாங்குவதாகவும், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தோல்விகளை மறைக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது மீண்டும் மீண்டும் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதிமுக முன்னணி நிர்வாகிகளை அரசியல் ரீதியாகப் பழிவாங்கத் திமுக அரசு துடிப்பதாகவும் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் எஸ்.பி.வேலுமணி தொய்வடைந்து விடமாட்டார் எனவும், அவரது மக்கள் தொண்டு, தொய்வின்றி தொடரும் என்பதை கட்சி உறுப்பினர்களும், கோவை மக்களும் நன்கு அறிவர் எனவும், திமுக அரசின் தீய முயற்சிகள் முறியடிக்கப்படும் எனவும் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | வேலுமணிக்கு எதிராக 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை - உயர்நீதிமன்றம் உத்தரவு!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News