கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை..!

சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்க ஓபிஎஸ் தீர்மானம் நிறைவேற்ற இருக்கும் சூழலில் சேலத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2022, 09:40 PM IST
  • எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • முன்னாள் அமைச்சர் தங்மணி உள்ளிட்டோர் பங்கேற்பு
  • அதிமுகவில் அதிகரிக்கும் உட்கட்சி குழப்பம்
கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை..! title=

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான மனக்கசப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனியாக தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்தார். அந்த தகவல் அதிமுக ஒருங்கிணைப்பாளருக்கு சொல்லப்படவில்லை என்று கூறப்பட்டது.

மேலும் படிக்க | அரசியல் பழிவாங்குதலுக்காக காவல்துறை பயன்படுத்தபடுகிறது - எடப்பாடி பழனிச்சாமி!

இதனையடுத்து சென்னை புழல் சிறைக்கு நேரில் சென்ற ஓ.பன்னீர்செல்வம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்தார். இதன்பின்னர் தேனி சென்ற அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும், குறிப்பாக சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கேட்டுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் நாளை மறுநாள் முறைப்படி தேனி மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சேர்த்துக் கொண்டால் மட்டுமே அதிமுகவை வழிநடத்த முடியும் எனத் தெரிவித்தார். 

இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, சேலத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் இருக்கும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, ராஜ்யசபா எம்.பி சந்திரசேகர், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். இதனால், அதிமுகவில் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.  

மேலும் படிக்க | TTV தூண்டுதலில் EPS, OPS மீது கொலை முயற்சி - புகார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News