வாக்காளர் பட்டியல் வெளியீடு குறித்து தேர்தல் அதிகாரி ஆலோசனை...!

நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக தலைமைச்செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை...! 

Last Updated : Aug 31, 2018, 11:31 AM IST
வாக்காளர் பட்டியல் வெளியீடு குறித்து தேர்தல் அதிகாரி ஆலோசனை...!  title=

நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக தலைமைச்செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை...! 

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான அனைத்துக் கட்சி கூட்டம், தேர்தல் அதிகாரி தலைமையில் காலை துவங்கி நடைபெற்று வருகிறது. 

இக்கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக, வரும் சனிக்கிழமையன்று வரைவு வாக்களர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனால், தலைமைத் தேர்தல் அதிகாரியின் தலைமையில், இன்று காலை முதல் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுவருகிறது. 

வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அந்தப் பட்டியலில் தங்களைப் பற்றிய விவரங்கள் சரியாக உள்ளதா இல்லையா? என்பதைப் பார்த்து சரிசெய்துகொள்ளலாம். அதுபோல, 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தோடு 18 வயது பூர்த்தி ஆகும் புதிய வாக்காளர்களும், தங்களது பெயரை சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியல் குறித்த திருத்தங்கள் மற்றும் சந்தேகங்களைத் தேர்தல் அதிகாரி தலைமையில், இன்று காலை நடக்கவிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 

 

Trending News