தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காட்டு யானை ஏரியில் குளிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற முதியவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தீர்த்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணன் (70) இவர் யானையை வேடிக்கை பார்ப்பதற்காக தனது தோட்டத்தின் வழியே சென்றுள்ளார் அப்போது ,ஏரி பகுதியில் செல்லும்போது பர்கூர் காப்புகாடு மலைப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த ஒற்றை காட்டு யானை மணியக்காரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஏரியில் ஆனந்த குளியலிட்டு கொண்டிருந்தது.
இன்று அதிகாலை சற்றும் எதிர்பாராமல், அவ்வழியே வேடிக்கை பார்க்க சென்ற போது கூலி தொழிலாளி கிருஷ்ணன் யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இது குறித்து கிராம மக்கள் பாலக்கோடு காவல்துறைக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடல் கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பாலக்கோடு காவல்துறையினரும் மற்றும் வனத்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனப்பகுதிக்குள் போதிய உணவு மற்றும் குடிநீர் இல்லாததால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு, மக்கள் வசிக்கும் பகுதிக்கு அடிக்கடி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு, கோடை காலங்களில், வனப்பகுதிக்குள் யானைகளுக்கான உணவு வழங்கும் திட்டமும், ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி யானைகளுக்கான குடிநீர் வழங்க வனத்துறை தாஸ் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | காவலர்கள் வாகனத்திற்கே அபராதம்! தொடங்கியது ஸ்டிக்கர் வேட்டை!
ஏரியில் ஆனந்த குளியலிட்டு சென்ற காட்டு யானை, அதே பகுதியில் கூலி தொழிலாளியை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பாஜக உறுதுணை - ஜோதிமணி குற்றச்சாட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ