சென்னை - சேலம் இடையிலான எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை – சேலம் இடையே எட்டுவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும்பணி நடந்துவருகிறது. விளை நிலங்கள், தோப்புகள் அழிக்கப்பட இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் அப்பகுதி மக்களும் இதற்கு பல்வேறு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்னை - சேலம் இடையிலான எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும், இந்த வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியதுடன், வழக்கு தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.