AIADMK Alliance : அதிமுக பக்கம் திரும்பாத பாமக.. செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி: கடைசி அஸ்திரம் இதுவா?

AIADMK Alliance : அதிமுகவுடன் பாமக இதுவரை அதிகாரப்பூர்வமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்காததால் அக்கட்சி மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2024, 12:37 PM IST
  • அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை சுணக்கம்
  • பாமக வருகைக்காக காத்திருக்கும் அதிமுக
  • பாஜக கூட்டணிக்கு மும்முரம் காட்டும் பாமக
AIADMK Alliance : அதிமுக பக்கம் திரும்பாத பாமக.. செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி: கடைசி அஸ்திரம் இதுவா? title=

AIADMK Alliance with PMK Anbumani : 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் திமுக ஏறத்தாழ முடிந்துவிட்டது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு சீட் ஒதுக்கியதுடன், அதிகாரப்பூர்வமாக அக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி இன்னும் பூஜ்ஜிய நிலையிலேயே இருக்கிறது. பாமக மற்றும் தேமுதிக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளலாம் என அதிமுக நினைத்தாலும், அக்கட்சிகளின் பாஜக கூட்டணியில் இடம்பெற முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. 

இருப்பினும் எப்படியாவது பாமகவை தங்களுடன் கூட்டணி அமைக்க வைத்துவிட வேண்டும் என நினைக்கிறது அதிமுக. அதற்காக அதிமுகவின் முக்கிய தலைவரான சிவி சண்முகம் பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் கூட்டணி குறித்து நேரடியாக சந்தித்து பேசினார். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அன்புமணி ராமதாஸ் பாஜக கூட்டணியில் இடம்பெறுவதற்கு மும்முரம் காட்டி வருவதே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் பொறுப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்தால் உடனே பாஜக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கவும் அன்புமணி ராமதாஸ் தயாராக இருக்கிறாராம்.

மேலும் படிக்க | ’கரூரில் திமுக தோற்கும்’ செந்தில் பாலாஜி கோட்டையில் சவால் விட்ட பாஜக!

பாஜகவின் டெல்லி தலைமையோ கூட்டணிக்கு மட்டுமே இப்போது ஓகே, மற்றதையெல்லாம் தேர்தலுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்கிறதாம். இருப்பினும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளில் கோரிக்கை ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கும் அன்புமணி ராமதாஸ், ஒருவேளை பாஜக உத்தரவாதம் கொடுக்கவில்லை என்றால் மட்டும் அதிமுக கூட்டணியைப் பற்றி சிந்திக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார். பாமகவின் வருகைக்காக அதிமுக காத்திருப்பதையும் பாஜகவுக்கு அன்புணி தெரிவித்திருக்கிறாராம். 

அதிமுகவை வைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆடும் ஆட்டத்தை புரிந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி இப்போது பாமக மீது அதிருப்தியில் தான் இருக்கிறாராம். அதேநேரத்தில் இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பாமகவின் வருகைக்காகவும் காத்திருக்கிறாராம் அவர். எப்படியாவது பாமக வந்துவிட்டால், தானாக தேமுதிக வந்துவிடும் என நினைக்கும் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸூக்கு தூது அனுப்பிக் கொண்டே இருக்கிறாராம். இந்த கடைசி முயற்சி வெற்றிபெறாவிட்டால் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க தொடங்கியுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News