இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கிடைத்த ‘புரட்சி’ பட்டம்

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தலைமகன் என்ற பட்டம் இன்று சூட்டப்பட்டது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 11, 2022, 01:16 PM IST
  • அதிமுக பொதுக்குழு இன்று நடைபெற்றது
  • பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார்
இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கிடைத்த ‘புரட்சி’ பட்டம் title=

இபிஎஸ்ஸுக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் நடந்த அதிகார ரேஸில் பழனிசாமி நாற்காலியை பிடித்துவிட்டார். இன்று வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Edappadi Palanisamy

இந்தச் சூழலில் பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தொண்டர்களின் குரலாக இருக்கும் இடைக்கால பொதுச்செயலாளர் விரைவில் நிர்ந்தர பொதுச்செயலாளராக உருவெடுக்க இருக்கும் புரட்சித் தலைமகன் எடப்பாடியாரை வணங்குகிறேன் என்றார். இதன் மூலம், புரட்சித் தலைவர், புரட்சி தலைவி ஆகிய பட்டங்களுக்கு அடுத்ததாக அதிமுகவில் புரட்சி தலைமகன் பட்டம் உருவெடுத்திருக்கிறது.

 

முன்னதாக, அதிமுக பொதுக்குழு நடத்துவதற்கு தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து காலை 9.35 மணிக்கு பொதுக்குழு கூடியது. இச்சமயத்தில், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் கடுமையான மோதல் நடந்தேறியது.

Panneerselvam

அதுமட்டுமின்றி அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களை கிழித்தெறிந்தனர்.

மேலும் படிக்க | AIADMK General Council Meet: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு

மேலும், கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, தன்னை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை. எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் கூறினார்.

Edappadi Palanisamy

இதற்கிடையே அதிமுக தலைமை கழகம் சார்பில் ஓபிஎஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகாரை அடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அலுவலகத்தை சுற்றியுள்ள இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ADMK : உறுப்பினர்களின் நம்பிக்கையை சம்பாதியுங்கள் : ஓபிஎஸ்-க்கு நீதிமன்றம் கண்டனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News