எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டு 31 அமைச்சர்கள் பதவியேற்பு!

Last Updated : Feb 16, 2017, 05:32 PM IST
எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டு 31 அமைச்சர்கள் பதவியேற்பு! title=

 முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை இன்று பொறுப்பேற்றனர்.

 முதல்வர் உள்ளிட்ட  தமிழக அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் கவர்னர்.

முதலில் 8 அமைச்சர்கள் பதவி ஏற்றார். பிறகு அடுத்த  8 அமைச்சர்கள் பதவி ஏற்றார். அதன் பின் 7 பேர் இறுதியாக 7 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். 

கவர்னர் முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி  தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார்.  கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்த்தார்.

 

 

இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தின் முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தின் 13-வது முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி உட்பட 31 பேர் கொண்ட அமைச்சர்களும் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். 

 

 

சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் இன்று அழைத்த பிறகு, அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் பதவி அப்படியே நீடிக்கின்றனர்.

* எடப்பாடி பழனிச்சாமி - முதல்வர்

* நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல துறைகள்திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை

* செங்கோட்டையன் - பள்ளி கல்வித்துறை

* செல்லூர் ராஜூ - கூட்டுறவு துறை

* தங்கமணி - மின்துறை மற்றும் மதுவிலக்கு

* வேலுமணி - உள்ளாட்சி துறை

* ஜெயக்குமார் - மீன்வளத்துறை

* சண்முகம் - சட்டத்துறை

* அன்பழகன் - உயர்கல்வி

* சரோஜா - சமூக நலத்துறை

* சம்பத் - தொழில்துறை

* கருப்பண்ணன் - சுற்றுசூழல்

* காமராஜ் - உணவு மற்றும் சிவில் சர்வீஸ் பொதுவிநியோகம்

* ஓ.எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை

* உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாடு

* விஜயபாஸ்கர் -சுகாதாரத்துறை

* துரைக்கண்ணு - விவசாயத்துறை

* கடம்பூர் ராஜூ- செய்தி துறை

* உதயகுமார் - வருவாய்த்துறை

* வெள்ளமண்டி நடராஜன் - சுற்றுலா துறை

* வீரமணி - வணிக வரித்துறை

* ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை

* பெஞ்சமின் - ஊரக தொழில்துறை

* நிலோபர் கபில் - பணியாளர்நலத்துறை

* எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை

* மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை

* ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை 

* அமைச்சர் பாஸ்கரன் - காதித்துறை

* சேவூர் ராமச்சந்திரன் - அறநிலையத்துறை

* வளர்மதி - பிற்பட்டோர் நலத்துறை

* பாலகிருஷ்ண ரெட்டி- கால்நடைத்துறை

மொத்தம் 31 அமைச்சர்கள்.

 

Trending News