சென்னை: இன்று இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் உட்பட திரைதுரையினருடன் இணைந்து பாலச்சந்தரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த் கூறியது, நான் எப்போது வெளிப்படையாகத்தான் பேசி வருகிறேன் என்றும், குறிப்பிட்ட சிலர் மட்டுமே எனக்கு காவி சாயம் பூச முயற்சிப்பதாகவும் கூறினார். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரத்தை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தி விட்டன. நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய பொருளாதாரம் மந்தமாக தான் உள்ளது; அதை மீட்க என்ன செய்யவேண்டுமோ, அதை செய்ய வேண்டும். நான் பாஜகவில் சேரப் போவதாக வரும் தகவல் பற்றி கேட்கிறீர்கள். அவர்கள் (பாஜக தலைவர்கள்) சொல்வார்கள். முடிவெடுக்க வேண்டியது நான் தான். அதற்காக, அவர்கள் என்னை நம்பிதான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
#WATCH Rajinikanth says, "There has been an attempt to paint me in colours of BJP like it was done to Thiruvalluvar (Tamil poet) statue. Neither Thiruvalluvar nor I will fall into their trap." pic.twitter.com/EMhPrrivB8
— ANI (@ANI) November 8, 2019
தொடர்ந்து திரைப்படத்தில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன் என தெரிவித்தார். அயோத்தி வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் ஆளுமையான, சரியான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் இருப்பதாகவும், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து படங்களில் நடிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்னும் வெற்றிடம் இருப்பதாக ரஜினிகாந்த் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இந்தநிலையில், திமுக பொருளாளர் துரைமுருகனிடம் ரஜினிகாந்த் கூறிய வெற்றிடம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்,
எப்பொழுதே தமிழகத்தின் வெற்றிடமத்தை ஸ்டாலின் நிரப்பி விட்டார். ஆனால் அதுக்குறித்து ரஜினி அறிந்திருக்க முடியாது. ஏனென்றால் அவர் தற்போது படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அவர் அரசியலுக்கு வந்ததும் உணர்த்ந்துக் கொள்வார் எனக் கூரினாட். அதுமட்டுமில்லாமல், வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானப் பூர்வ உண்மை. தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது எனவும் கூறினார்.