சேலம்: சேலத்தில் குடிபோதையில் வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்திய மினி ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். விபத்தில் காயம்பட்ட இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சேலம் (Salem) 5 ரோடு அருகே குடிபோதையில் அதிவேகமாக மினி ஆட்டோவை ஓட்டி வந்த நபர் இருசக்கர வாகனம் மீதும், நடந்து சென்ற ஒருவர் மீதும் மோதி ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் நான்கு வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த விஜயகுமார் மற்றும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஸ்ரீதர் ஆகியோர் மீதும் மினி ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் (Accident) இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடிபோதையில் மினி ஆட்டோவை ஒட்டி வந்த மேச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரன் குடிபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்பத்திய cctv காட்சிகளும் வெளியாகி உள்ளன.
ALSO READ: கோவை மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது
குடிபோதையில் இருக்கும்போது வாகனங்களை ஓட்டுவது ஓட்டும் நபருக்கு மட்டும்மல்லாமல் சாலையில் மற்ற வாகனங்களில் செல்பவர்களுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றது. வாகனத்தை ஓட்டும்போது குடிபோதையில் இருக்கக்கூடாது என்பது தெரிந்தும் பலர் இந்த விதியை மதிக்காமல் மெத்தனத்தில் இருப்பது வருத்தத்தையே அளிக்கின்றது.
குடிபழக்கமே ஒரு கேடு விளைவிக்கும் பழக்கம். குடியை கெடுத்து வாழ்க்கையை சூனியமாக்கும் இப்பழக்கத்தினால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம். ஒருவர் குடித்தால், அது அந்த நபரையும் அவரது குடும்பத்தையும் பாதிக்கின்றது. ஆனால், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால், தவறே செய்யாத பலரும் அவரது குடும்பங்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
சாலைகளில் நாம் செல்லும்போது சமூகப்பொறுப்புடன் நாம் நடந்துகொள்வது மிகவும் முக்கியம். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தவறு என காவல் துறையும் அரசாங்கமும் (TN Government) அவ்வப்போது பல விதங்களில் மக்களுக்கு எடுத்துக்கூறினாலும், குடிபோதையில் புத்தி இழந்து பயணிக்கும் பலர் திருந்துவதாகத் தெரியவில்லை.
ALSO READ:ஏற்காடு சாலையில் ராட்சத பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு- Watch
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR