சென்னை: ஒரு பிரபல தமிழ் படத்தின் காட்சிகளை நினைவுபடுத்தும் காட்சிகள் நிஜத்தில் நடந்துள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படவிருந்த பிராண்டட் 'மசாலா' பாக்கெட்டுகள் அடங்கிய கூரியரில் இருந்து ரூ .30 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ போதைப்பொருளை (Pseudoephedrine) சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 1985 ஆம் ஆண்டின் NDPS சட்டத்தின் கீழ் இந்த பறிமுதல் செய்யப்பட்டது, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
உளவுத்துறையின் தகவல்களின் பேரில், மசாலா பொடிகள் இருப்பதாகக் கூறப்பட்ட ஒரு கூரியரை சுங்க அதிகாரிகள் தடுத்து விசாரித்தனர்.
பரிசோதனையில், 50 கிராம் மற்றும் 100 கிராம் எடையுள்ள பிராண்டட் மசாலா பாக்கெட்டுகள் மற்ற மளிகை பொருட்களுடன் காணப்பட்டன. தீவிர பரிசோதனையில் மிளகாய் தூள் மற்றும் சாம்பார் தூள் பாக்கெட்டுகள் சிதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அறிக்கையின்படி, பாக்கெட்டுகள் திறக்கப்பட்டபோது வெள்ளை படிக தூள் கொண்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
மசாலா பாக்கெட்டுகளுக்குள் இருந்து மொத்தம் 37 பிளாஸ்டிக் பைகள் மீட்கப்பட்டன.
ஒரு மருந்தாக, Pseudoephedrine நாசிப் பாதையில் உள்ள இரத்த நாளங்களை சுருக்கி செயல்படுகிறது மற்றும் குளிர் மற்றும் ஒவ்வாமையால் ஏற்படும் நாசி நெரிசலைப் போக்க பயன்படுகிறது. இருப்பினும், இது மெத்தாம்பேட்டமைன்களின் உற்பத்தியில் ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படலாம்.
ALSO READ: Pressure Cooker-ல் தங்கம்: Viral ஆகும் கேரளாவின் தங்கக் கடத்தல் படங்கள்!!
பார்சலின் சரக்குதாரர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் பார்சல் ஆஸ்திரேலியாவின் (Australia) நியூ சவுத் வேல்ஸ், ஆபர்னுக்கு அனுப்படவிருந்தது. எனினும், அதிகாரிகளின் தேடல்களிலும் விசாரணையிலும் சென்னையைச் சேர்ந்த 37 வயதான சாதிக் என்பவர்தான் இந்த கடத்தலின் சூத்திரதாரி என்றும், சரக்கு முகவரி தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், ஆஸ்திரேலியாவிலிருந்து போதைப்பொருளுக்கான (Drugs) ஆர்டரைப் பெற்றதும், சாதிக் பௌடரை பெங்களூரைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து வாங்கி தனது கூட்டாளியிடம் ஒப்படைத்தார். சென்னையில் வசிக்கும் கான் என்பவரின் உதவியுடன் இந்த கூட்டாளி மருந்துகளை மசாலா தூள் பாக்கெட்டுகளில் அடைத்து மறைத்து வைத்தார்.
இறுதியாக, புதுக்கோட்டையில் வசிக்கும் ஆண்டனி, சென்னைக்கு வந்து, கானிடமிருந்து பார்சலைப் பெற்று ஆஸ்திரேலியாவுக்கான கூரியரை முன்பதிவு செய்தார். கூரியரை முன்பதிவு செய்ய தனது சொந்த ஆவணங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஆண்டனி தேனியைச் சேர்ந்த ஒரு நண்பரின் ஆதார் அட்டையை தவறாகப் பயன்படுத்தினார்.
இந்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் மேலதிக விசாரணை நடந்து வருகிறது.
ALSO READ: சென்னையில் ரூ .1.65 கோடி மதிப்புள்ள போதை மருந்து கைப்பற்றிய அதிகாரிகள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR