சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ஆம் ஆண்டு நடைபெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், எப்போது நடைபெறும் என்பதில் பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கின்றன. சட்டசபைத் தேர்தலை மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகம் கோருகிறது.
சட்டமன்றத் தேர்தலை (Election) முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க (AIADMK) சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தின் ஐந்தாண்டு பதவி காலம் 2021 மே மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 15வது சட்டமன்றம் (ASSEMBLY) ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது. அதன் பதவிக் காலம் முடிவடைந்த பிறகு 16வது சட்டசபைக்கான உறுப்பினர்களை (MLA) தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படவேண்டும். தேர்தல் ஆணையம் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டது. சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டுமார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகலாம்.
Also Read | இட ஒதுக்கீடு சர்ச்சை: தமிழக அரசு நிலையை மாற்ற வேண்டும்- ராமதாஸ் அறிக்கை
சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் (Election Commission), மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் (Chennai) அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
அ.இ.அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகிய இருவரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அவற்றை மனுவாகவும் அளித்தனர். மாநிலத்தில் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று ஆளும் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிகிறது.
தி.மு.கவின் (DMK) சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக்கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ எம்.பி. இருவரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். தி.மு.க.வின் கருத்துக்களை மனுவாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக தேர்தல் (Election) நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
Also Read | அதிமுகவை நிராகரிக்கிறோம்! தேர்தல் பரப்புரை வீடியோவை திமுக வெளியீடு!
80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் (Postal vote) திட்டத்தை ரத்து செய்யவும் தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்துக் கட்சிகளிடம் பேசிய பிறகு தேர்தல் ஆணைய அதிகாரிகள் சட்டமன்ற தேர்தலை எப்போது நடத்தலாம் என்று முடிவு செய்வார்கள்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR