புளிய மரங்களை வெட்டி பேருந்து நிலையம் வேண்டாம் - உயர் நீதிமன்றம்

பேருந்து நிலையம் அமைப்பதற்காக நூறாண்டுகளுக்கும் மேலான புளிய மரங்களை வெட்ட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : May 21, 2022, 02:11 PM IST
  • புளிய மரங்களை வெட்ட அனுமதி வழங்க கூடாது
  • மரங்களை வெட்டாமலேயே பேருந்து நிலையம் ?
  • கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைப்பு
புளிய மரங்களை வெட்டி பேருந்து நிலையம் வேண்டாம் - உயர் நீதிமன்றம்  title=

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி ரஞ்சித் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சேலம் மாவட்டம் மல்லூர் பஞ்சாயத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக திருச்சி பிரதான சாலையில் உள்ள ஏழு புளியமரங்களை வெட்ட அனுமதி கோரி நெடுஞ்சாலை துறைக்கு மல்லூர் பஞ்சாயத்து கடிதம் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

Highcourt,உயர் நீதிமன்றம்

மல்லூர் கிராமத்துக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை உள்ளதால் அனைத்து வாகனங்களும் புறவழிச்சாலையைப் பயன்படுத்துவதால் புதிதாக பேருந்து நிலையம் கட்ட எந்த அவசியமும் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

நூறாண்டுகளுக்கும் மேலான இந்த மரங்கள் எந்த வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லை என்பதால் மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, மரங்களை வெட்டாமலேயே பேருந்து நிலையம் கட்ட முடியும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

மேலும் படிக்க | 8 வயது சிறுமியை கடத்தி முத்தம் கொடுத்த வாலிபருக்கு 17 ஆண்டு சிறை

இதைக் கேட்ட நீதிபதி,  மரங்களை வெட்ட அனுமதி வழங்க கூடாது என சேலம் வருவாய் கோட்டாட்சியருக்கு  உத்தரவிட்டார்.மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி, சேலம் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மல்லூர் பஞ்சாயத்து செயல் அதிகாரி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தார்.

மேலும் படிக்க | நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்காக அரைமணி நேரத்தில் முடிக்கப்பட்ட மாநகராட்சி கூட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News