விருகம்பாக்க தனியார் உணவகத்தில் திமுக பிரமுகர்களால் ஏற்பட்ட தகராறில் பாதிக்கப்பட்டவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்!
கடந்த 28-ஆம் நாள் சென்ன விருகம்பாக்கத்தில் நடைப்பெற்ற இச்சம்பவத்தில் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தன்று பூட்டப்பட்டிருந்த நிலையில் இருந்த கடையின் ஷட்டரை திறக்கச் சொல்லி உள்ளே புகுந்த இந்த குழு உணவக ஊழியர்களை தாக்கியுள்ளனர்.
DMK cadre attacking a hotel owner for not providing them 'free briyani'#ஓசிபிரியாணிதிமுக pic.twitter.com/jrAucqFcZa
— Ragnarok (@kalaignarkaruna) August 1, 2018
இச்சம்பவத்தின் காட்சிகளானது கடையில் பொருத்தப்பட்டு இருந்து CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளின் உதவியுடன் கடையின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட திமுக உறுப்பினர்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட நபர்களிடன் திமுக செயல் தலைவர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
காவிக்கருங்காலிகள் கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்த முயன்றாலும், என்றும் மக்களின் பக்கம் நிற்கும் இயக்கம் தான் திமுக. இந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கழகத்தின் வரலாற்றுச் சிறப்பு. அதை மேலும் மேன்மையுடன் வெளிப்படுத்துகிறார் செயல் தலைவர் @mkstalin. #GentlemanMKS pic.twitter.com/jqXdZggGrl
— இசை S D (@isai_) August 2, 2018