'ஊழல் பற்றி அவர்கள் பேசவே கூடாது...' பொள்ளாச்சியில் பாஜகவை பொளந்தெடுத்த கனிமொழி

Kanimozhi Election Campaign: விபத்தாக பாஜக ஆட்சி அமைந்தால் நிதி தமிழகத்திற்கு வராது என்று பொள்ளாச்சியில் தேர்தல் பரப்புரையின் போது எம்.பி., கனிமொழி பேசியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 29, 2024, 11:17 PM IST
  • ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் போடுவேன் என்று சொன்னார்கள் போடவில்லை - கனிமொழி
  • ஒன்றிய அரசு போடும் 90 சதவீத வழக்குகள் எதிர்கட்சி தலைவர்கள் மீதுதான் - கனிமொழி
  • மிரட்டியே ஆட்சியை நடத்தலாம் என பாஜக நினைக்கிறது - கனிமொழி
'ஊழல் பற்றி அவர்கள் பேசவே கூடாது...' பொள்ளாச்சியில் பாஜகவை பொளந்தெடுத்த கனிமொழி title=

Coimbatore Kanimozhi Lok Sabha Election Campaign: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட நெகமத்தில், திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து திமுக எம்.பி., கனிமொழி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "நெகமத்தில் உள்ள இந்த கூட்டத்தை பார்க்கும்போது ஈஸ்வரசாமி வெற்றி உறுதியாகிவிட்டது. இந்த தேர்தல் என்பது வெற்றி தோல்விக்காக நடப்பதில்லை. நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது. 

சுதந்திரப் போராட்டம் நடைபெறுகிறது என தெரிந்து கொள்ள வேண்டும். பாஜக - அதிமுக வேறு வேறு இல்லை, இப்போது நடப்பது தேர்தல் நாடகம். தேர்தல் முடிந்த பின் ஸ்டிக்கர் கட்சிகள் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இந்திரா காந்தி கொண்டு வந்த வீடு கட்டிகொடுக்கும் திட்டத்திற்கு மோடி வீடு என கூறுகிறார்கள், இந்த திட்டத்தில் ஒன்றிய அரசு 72 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கிறது. 

'அம்பானி, ஆதானிக்கான ஆட்சி'

மீதி பணம் நம் முதல்வர் கொடுக்கும் பணம். இதற்கு முதல்வர் வீடு கட்டும் திட்டம் என்று தான் பெயர் வைக்க வேண்டும். ஆனால் மோடி வீடு என ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். அனைத்து தொழிலாளர்களையும்  காப்பாற்றக்கூடிய முதல்வர் உழைக்கக்கூடிய மக்களுக்கு ஆதரவாக உறுதியாக பாடுபடக்கூடிய நம்முடைய முதல்வர் திராவிட மாடல் ஆட்சி.

மேலும் படிக்க | வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்!

ஆனால் ஒன்றிய பாஜக ஆட்சி, அம்பானி, ஆதானிக்கான ஆட்சி. விவசாய கடன் ரத்து செய்ய கோரினோம், படித்த இளைஞர்கள் மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்யுங்கள் என கோரினோம், செய்வதில்லை.  விவசாயிகளுக்காக அடிப்படை ஆதார விலை வாங்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கொடுக்கவில்லை. ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்க வேண்டிய ரூ. 68 ஆயிரம் கோடி மேலான கடன்களை ரத்து செய்து இருக்கிறது.

பாஜக வந்தால் நிதி வராது

விவசாயிகள், மாணவர்கள் கேட்டால் இல்லை. நமது வரிப்பணம் அனைத்தும் வாங்கிக் கொண்டு போகிறார்கள் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் 25 பைசாவை திருப்பிக் கொடுக்கிறார்கள். உத்தர பிரதேசம் மாநிலம் ஒரு ருபாய் கொடுத்தால் ரெண்டு ரூபாய் ரெண்டு பைசா வழங்குகிறார்கள். இப்படி நிதி நெருக்கடி இருந்தாலும் தமிழ்நாடு முழுவதும் முதல்வர் கூறியது போது கலைஞர் மகளிர் உரிமை தொகை 1.13 கோடி பேருக்கு வழங்கியுள்ளோம்.

மீதி உள்ளவர்களுக்கும் ஒன்றியத்தில் நியாயமான ஆட்சி அமைந்தவுடன், நமக்கு வரவேண்டிய நிலை சரியாக வந்தவுடன் அவர்களுக்கும் முகாம் அமைத்து மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். விபத்தாக பாஜக ஆட்சி அமைந்தால் நிதி தமிழகத்திற்கு வராது, இதனால் தற்போது வழங்கப்படும் தொகையையும் நாம் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் போடுவேன் என்று சொன்னார்கள் போடவில்லை, காசு இல்லாத கணக்கில் இருந்து அபராதம் என்ற பெயரில் பணத்தை எடுக்கிறார்கள்" என்றார். 

மேலும் படிக்க | மு.க.ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர்! அண்ணாமலை கடும் விமர்சனம்

பாஜகவின் வாஷிங் மெஷின்

மேலும், கனிமொழி கூறுகையில், "ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் கல்வி, விவசாயக் கடன் ரத்து செய்யப்படும்,  சுங்கச்சாவடிகள் இழுத்து மூடப்படும். தூய்மையான ஆட்சி எனக்கூறும், பாஜக ஊழலை பற்றி பேசக்கூடாது. தேர்தல் பத்திரங்களை கொண்டு வந்து சட்டப்படி ஊழல் செய்யும் கட்சி பாஜக மட்டுமே, இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து கழுத்தில் கத்தியை வைத்து என்ன இருக்கிறது என கேட்பார்கள், அதே போலத்தான் தேர்தல் பத்திரம் வாங்குகிறார்கள்.

அமலாக்கத்துறை சோதனை வழக்கு போட்டவுடன் அந்த நபர் தேர்தல் பத்திரம் வாங்குகிறார். பத்திரம் வாங்கியவுடன் பாஜக வைத்துள்ள வாசிங் மெஷினில் உள்ளே தூக்கி போட்டுவிடுவார்கள், உடனடியாக சுத்தம் ஆகிவிடுவார்கள். ஒன்றிய அரசு போடும் 90 சதவீத வழக்குகள் எதிர்கட்சி தலைவர்கள் மீது தான் உள்ளது. முதல்வர்கள், அமைச்சர்களை கைது செய்து வைத்துள்ளனர். 

வழக்கு உள்ள நபர்கள் பாஜகவில் இணைந்தால் வழக்கு மறுநாளே காணாமல் போகும், எப்படி என்று தெரியவில்லை. மிரட்டியே ஆட்சியை நடத்தலாம் என்ற பாஜக ஆட்சியின் முடிவு காலம் நெருங்கி விட்டது, ஒன்றிய ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | சசிகலா EPS-ஐ விட இளையவர்... குண்டை தூக்கிப்போட்ட கே.சி. பழனிச்சாமி - என்ன மேட்டர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News