தொழிலாளர்களுக்கு திமுக தான் காவலாளி; மோடி அல்ல: ஸ்டாலின் காட்டம்!!

தற்போது ஆட்சியிலுள்ள மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றச்சாட்டு!! 

Last Updated : May 1, 2019, 10:20 AM IST
தொழிலாளர்களுக்கு திமுக தான் காவலாளி; மோடி அல்ல: ஸ்டாலின் காட்டம்!! title=

தற்போது ஆட்சியிலுள்ள மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றச்சாட்டு!! 

ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் தேதி உழைக்கும் வர்க்கத்தினரை சிறப்பிக்க உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உழைப்பாளர் தினத்தையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் முதன் முதலாக தொழிலாளர் தினம் 1923ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததோடு, இன்று தூத்துக்குடியில் பேரணி நடத்தி வருகிறார். இந்த பேரணியில் திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.  அப்போது, மக்களிடம் ஸ்டாலின் பேசுகையில், தற்போது ஆட்சியிலுள்ள மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. 
மே 23 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் இதற்கு விடிவுகாலம் வரும் எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும், தொழிலாளர்களுக்கு திமுக தான் காவலாளி; நரேந்திர மோடி அல்ல என அவர் குற்றம் சாட்டினார். 

 

Trending News