பிரதமர் மோடியைப் போல் பெரிய அளவில் வர வேண்டுமென்றால் நிறைய வாசிக்க வேண்டும். நான் இதுவரை 20 ஆயிரம் புத்தகங்களை வாசித்துள்ளேன் என்று அண்ணாமலை சொன்னதுதான் தாமதம். இதையே ஒரு காரணமாக வைத்து திமுகவினர் விடாமல் கலாய்ப்புப் படலத்தில் இறங்கியுள்ளனர். இதற்கும் அசராமல் அண்ணாமலை அடுத்தடுத்து டஃப் கொடுத்து வருகிறார்.
மதுரையில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் சமூக ஊடகங்களில் மாணவர்கள் மூழ்கி இருக்கக்கூடாது, நிறைய படிக்க வேண்டும் என்று அறிவுரைகளை அள்ளித் தெளிக்கத் தொடங்கினார். உடனே, பிரதமர் மோடியைப் போல பெரிய அளவில் வர வேண்டுமென்றால் நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். நான் இதுவரை 20 ஆயிரம் புத்தகங்களைப் படித்துள்ளேன். வீடு, அலுவலகம் என நான் எங்கு இருந்தாலும் அங்கே தவறாமல் புத்தகங்கள் இருக்கும். வாசிப்புதான் மனிதநேயத்தை உருவாக்கும், மலரச்செய்யும் என்று அக்கறையுடன் பேசினார். அவரின் இந்தப் பேச்சு அண்மையில் வைரலானது. அண்ணாமலையின் வயதைப் பொறுத்துப் பார்த்தால் அவர் அவ்வளவு புத்தகங்களைப் படித்திருக்க வாய்ப்பே இல்லை, சும்மா அளந்து விடுகிறார் என்றெல்லாம் திமுகவினர் கிண்டல் செய்தனர்.
முன்னதாக, மின்சாரத் துறையில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில் அதற்கும் சேர்த்து பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 13,700 நாட்களில் 20,000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக்கோளாறுகளுக்குப் புரிதல் வேண்டும் அல்லது புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும், அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை என காட்டமாக பதில் அளித்தார். மின்சாரத் துறையில் முறைகேடு நடந்ததாகக் கூறும் ஆண்டில் அதிமுக ஆட்சியில் இருந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க | இப்படியா விமர்சிப்பது? அண்ணாமலைக்கு காட்டமாக பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி
BGR நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019.
டெண்டர் கொடுத்த ஆட்சி அதிமுக.
வாழ்ந்த 13700+ சொச்ச நாட்களில் 20000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக்கோளாறுகளுக்கு புரிதல் வேண்டும் அல்லது புரிந்து கொள்ள பக்குவம் வேண்டும். அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) March 18, 2022
புத்தக விவகாரம் குறித்து திமுக எம்.பி., எம்.எம்.அப்துல்லா சமூக வலைதளத்தில் குறிப்பிடுகையில், அண்ணாமலை வயதுடைய யாரும் இத்தனை காலகட்டத்திற்குள் இத்தனை புத்தகங்களை படிக்கவே முடியாது என்பது மட்டும் எனக்குத் தெரியும் என்று தெரிவித்துள்ளார். மேலும், நீங்கள் எம்.பி யாக இல்லாமல் பழைய அப்துல்லாவாக இருந்து இருந்தால் மேலே கேட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்லி இருப்பீர்கள்? என்று, அவராகவே கேள்வி - பதில் வடிவில் விடை அளித்துள்ளார். அதில், ரெண்டாயிரம்..நாலாயிரம்..எட்டாயிரம்..பத்தாயிரம்..பிம்பிலிக்கி பிலாப்பி... மாமா, பிஸ்கோத்து!! என்று கிண்டல் செய்துள்ளார்.
இன்று தமிழக பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயர் சூட்டி மாநில அரசு பட்ஜெட்டை அறிவித்துள்ளது.
திமுக அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தொலை நோக்கு திட்டம் எதுவும் இதில் இல்லை. இந்த பட்ஜெட் பகல் கனவு பட்ஜெட் ஆக உள்ளது என்று தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாஜகவினருக்குத் தெரிந்தது எல்லாம் புதிய வரியை விதிப்பதும், பொதுதுறை நிறுவனங்களை விற்பதுமே! நீங்கள் எதிர்பார்த்தது எதுவும் இல்லாத பட்ஜெட்டாக இருப்பதால் இந்த பட்ஜெட் பகல் கனவாகத்தான் தெரியும் என்று விமர்சித்துள்ளார்.
திரு @annamalai_k அவர்களே! பாஜக-வினருக்கு (உங்களுக்கு) தெரிந்தது எல்லாம் புதிய வரியை விதிப்பதும், பொதுதுறை நிறுவனங்களை விற்பதுமே! நீங்கள் எதிர்பார்த்தது எதுவும் இல்லாத பட்ஜெட்டாக இருப்பதால் இந்த பட்ஜெட் பகல்கனவாக தான் தெரியும்! https://t.co/YPNqwHncbz
— Mano Thangaraj (@Manothangaraj) March 18, 2022
இப்படி திமுகவினர் விடாது கலாய்த்தாலும், அண்ணாமலை அசராமல் அடுத்தடுத்த விஷயங்களில் கருத்து சொல்லி வருகிறார்.
மேலும் படிக்க | மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை எப்போது?..மகளிர் ஏமாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR