2019 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளைக் கவனிக்க தொகுதிக்கு 2 பொறுப்பாளர்கள் வீதம் தமிழகம் மற்றும் புதுவையில் DMK பொறுப்பாளர்கள் அறிவிப்பு....
திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கடந்த 17 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் திமுக தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை திமுக தலைமை அறிவித்தது. இதில் புதுமுகங்கல், வழக்கறிஞர்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். இளம் திமுக நிர்வாகிகளுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருக்கிறது. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அந்த பகுதியில் வாழும் சமுதாய மக்களுக்கு தகுந்தவாறு பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்து இருக்கிறது.
இந்த பொறுப்பாளர்களின் பெயர் பட்டியலை திமுக தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
'நாடாளுமன்ற தேர்தல் - 2019'
'தமிழ்நாடு - புதுவை மாநில நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கழக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிப்பு'
'மாவட்ட கழக செயலாளர்களோடு இணைந்து பணியாற்ற தலைமைக் கழகம் வலியுறுத்தல்' pic.twitter.com/PuoNEfhaNX
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) October 20, 2018
கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர்களோடு இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.