தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அரசின் கோப்புகளை கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்த நிலையில், அது தொடர்பாக விளக்கம் அளித்தார். மேலும், அரசு அனுப்பிய கோப்புகள் குறித்து பொதுவெளியிலும் பேசினார். இது ஆளும் திமுக அரசுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆளுநர் அவர் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ப செயல்படாமல் அரசியல் கட்சி தலைவர்போல் செயல்பட்டு வருவதாக பதிலடி கொடுத்தனர் திமுக அமைச்சர்கள். ஆனால், ஆளுநர் பொதுவெளியில் அரசு சார்ந்த குற்றச்சாட்டுகளை பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | அரசியலில் விஜய்யை ஆதரிப்பீர்களா? கேள்விக்கு சரத்குமார் சொன்ன பதில்!
குறிப்பாக செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவரின் நடவடிக்கைகள் ஆளும் திமுக அரசுக்கு மிகபெரிய அதிருப்தியை கொடுத்துள்ளது. அமைச்சர்கள் இலாக்கா மாற்றத்துக்கு முதலில் ஒப்புதல் கொடுக்காமலும், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, முதலமைச்சரின் அதிகாரத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரமில்லை, யார் அமைச்சரவையில் நீடிக்க வேண்டும், யாருக்கு என்ன இலாக்கா ஒதுக்க வேண்டும்? என்பது குறித்தெல்லாம் முதலமைச்சர் மட்டுமே முடிவெடுக்க முழு அதிகாரம் இருப்பதாக பதில் கடிதத்தில் சுட்டிக்காட்டியது. அமைச்சரவை மற்றும் முதலமைச்சர் கொடுக்கும் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அமைச்சரவை இலாக்கா மாற்றத்தை தமிழக அரசே மாற்றி அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் காட்டமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநரை விமர்சித்து வந்திருக்கும் அந்த கட்டுரையில், " ஆடு திருடிய திருடன் என்பார்களே அதுபோல ஆளுநர் அகப்பட்டு முழிப்பதை நம்மால் உணர முடிகிறது!. எதையும் யோசிக்காது முடிவெடுக்கும் 'முந்திரிகொட்டை’ தனத்தால் அவர், தான் மட்டுமல்லாமல் தான் வகிக்கும் பதவியையும் தரம் தாழ்த்திக்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு எத்தனையோ ஆளுநர்களைப் பார்த்துள்ளது! சில ஆளுநர்கள் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளனர். ஆனால் இன்றைய ஆளுநர் ரவி போல எத்தனை சூடுபட்டாலும் திருந்தாத ஜென்மங்களாக யாரும் இருந்ததில்லை. ஏன் அதிகார வரம்பு மீறி கடிதங்கள் அனுப்புகிறார்? - என்ற கேள்வி எழுவதும் நியாயமானதுதான்!. சிலருக்கு எதையாவது குத்தி, குதறிக் கொண்டே இருப்பதில் ஒரு வித ஆனந்தம்; அதனைத்தான் சேடிசம் என்று கூறுவார்கள்! நமது தமிழ்நாட்டு ஆளுநரின் நடவடிக்கைகளைக் காணும்போது இதுதான் நம் நினைவுக்கு வருகிறது!. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞரால் பதப்படுத்தப்பட்ட மண் தமிழ் நாட்டு மண்! இங்கே சனாதனம், வர்ணாசிரமம் எனும் விஷச் செடிகளை வளர்க்க எண்ணி விஷமத்தனங்களில் ஈடுபடாதீர்கள்!" என்ற எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பீகாரில் இருந்து வேலைக்கு வந்தவர்களில் ஆளுநரும் ஒருவர் - அமைச்சர் எவ.வேலு விமர்சனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ