தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-அடி முழு வெண்கல நிருவுருவச்சிலை தயாராகும் பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்!
திராவிட முன்னேற்ற கழகத்தின் 50 ஆண்டுகால தலைவராகவும், தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும் இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் வெண்கலச் சிலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ளது.
இந்த சிலையினை செய்யும் பணி தற்போது முழுவீச்சில் நடைப்பெற்று வருகின்றது. இந்த சிலையினை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிமைக்கிறார்.
இந்நிலையில் முழுவீச்சில் உறுவாகி வரும் கலைஞரின் சிலை செய்யும் பணியினை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று பார்வையிட்டார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள தலைவர் கலைஞர் அவர்களின் 8 அடி உயர முழு வெண்கல திருவுருவச்சிலை வடிவமைப்புப் பணிகளை கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை உருவாகி வருகிறது. pic.twitter.com/pYE2yNS765
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) September 11, 2018
முன்னதாக புதுச்சேரியில் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவாக, புதுச்சேரி 100 அடி சாலைக்கு, காரைக்கால் - திருநள்ளாறு புறவழிச்சாலைக்கும் கருணாநிதியின் பெயர் வைக்கவும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மறைந்த கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்கவும் புதுசேரி அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை புதுசேரியில் அமைக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.