திண்டுக்கல்: முதல் முறையாக எதிர்கட்சி உறுப்பினர் இல்லாத மன்றமாக சின்னாளப்பட்டி பேரூராட்சி உருவெடுத்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக திண்டுக்கல் சின்னாளப்பட்டி பேரூராட்சி எதிர்கட்சி உறுப்பினர் யாருமே வெற்றி பெறவில்லை. அங்கு உள்ள 18 வார்டுகளில் 17 வார்டுகளை திமுக தன்வசம் ஆக்கியுள்ளது. மீதமுள்ள ஒரே ஒரு இடத்தில் சுயேச்சை வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: கொலை செய்யப்பட்ட திமுக வட்டச்செயலாளர் செல்வத்தின் மனைவி வெற்றி
வெற்றி பெற்ற திமுக உறுப்பினர்கள்:
- வைத்தீஸ்வரன்கோயில்
- சின்னாளப்பட்டி
- நிலக்கோட்டை
- செஞ்சி
- ஒடுக்கத்தூர்
- நத்தம்
- கடத்தூர்
- பெண்ணாத்தூர்
- கொல்லங்கோயில்
- எஸ். புதூர்
- பெரிய கொடிவெரி
- குமரலிங்கம்
- கருங்கல்
- சேவுகம்பட்டி
- சங்கராமநல்லூர்
- தேவர்சோழா
- ஆலந்துறை
மேலும் படிக்க: சுயேச்சைகளின் கையில் கமுதி பேரூராட்சி 15ல் 14 வார்டுகளில் வெற்றி
#ElectionResults | எதிர்கட்சி வரிசையில் யாருமில்லாத பேரூராட்சி-திமுக 17 -
சுயேட்சை 1
திண்டுக்கல் சின்னாளப்பட்டி பேரூராட்சி முதல் முறையாக எதிர்கட்சி உறுப்பினர் இல்லாத பேரூராட்சி மன்றமானது.#ElectionResultWithZeeTamilNews | #ZeeTamilNews | #TNElection2022 | #DMK | #Dindigul— Zee Tamil News (@ZeeTamilNews) February 22, 2022
இதன்மூலம் திண்டுக்கல் சின்னாளப்பட்டி பேரூராட்சி முதல் முறையாக எதிர்கட்சி வரிசையில் யாருமில்லாத பேரூராட்சி மன்றாமாக மாறியுள்ளது.
இதேபோன்ற ஒரு சம்பவம் ராமநாதபுரம் கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் 14 இடங்களில் சுயேச்சைவேட்பாளர்கள் தேர்வாகியுள்ளனர். ஒரு இடத்தில் பாஜக தேர்வாகியுள்ளது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை தான் இன்று நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
சின்னாளப்பட்டி சிறப்பு:
சின்னாளப்பட்டி திண்டுக்கல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம். வாடிப்பட்டி மாதா கோயில், ஆத்தூர் காமராஜர் அணை, சிறுமலை மலைதொடர், குத்தாலம்பட்டி நீர் வீழ்ச்சி, அதிசயம் தீம் பார்க் போன்ற பல சுற்றுலா இடங்கள் இதன் அருகாமையில் உள்ளன. இங்கு நடத்தப்படும் அழகர் திருவிழா மக்கள் கூட்டத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR