ஆப்பிள், பூர்விகா நிறுவனத்திற்கு ரூ.2,80,000 அபராதம்: காரணம் என்ன

ஆப்பிள் மற்றும் பூர்விகா செல்போன் விற்பனை நிறுவனத்திற்கு 2 லட்சத்தி 80 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 5, 2022, 04:13 PM IST
  • ஆப்பிள் ஐ போன் வாங்கிச் சென்ற ஐந்து மாதத்திலே switch on ஆகாமல் பழுது ஏற்பட்டது.
  • மன உளைச்சலுக்கு உள்ளான மீனா தேனி மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆப்பிள், பூர்விகா நிறுவனத்திற்கு ரூ.2,80,000 அபராதம்: காரணம் என்ன title=

தேனி மாவட்டம் அரண்மனைபுதூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மீனா. இவர் தனது மகன் திலக்கிற்கு ஆப்பிள் ஐ போன் வாங்க வேண்டும் என்று  பிரபல செல்போன் விற்பனை நிறுவனமான பூர்விகா வின் கிளை நிறுவனமான தேனி பழைய பேருந்து நிலையம் அருகே செயல்படும் செல்போன் விற்பனை நிறுவனத்திற்கு கடந்த 20.11.2016 ஆம் ஆண்டு சென்று 22 ஆயிரத்தி 500 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் ஐ போன் 5s என்ற செல்போனை வாங்கியுள்ளார். 

அந்த செல்போனுக்கு ஒரு வருடம் வாரண்டி இருப்பதாக கூறி விற்றுள்ளனர் செல்போன் விற்பனை நிறுவனத்தினர். ஆனால், ஆப்பிள் ஐ போன் வாங்கிச் சென்ற ஐந்து மாதத்திலே switch on ஆகாமல் பழுது ஏற்பட்டது.  இது குறித்து செல்போன் விற்பனை நிறுவனத்திற்கு சென்று முறையிட்டுள்ளார் மீனா. செல்போனை பெற்றுக்கொண்ட நிறுவனத்தினர் ஒரு வார காலத்தில் பழுது நீக்கி தருவதாக கூறியுள்ளனர்.

 

பின்னர் ஒரு வாரத்திற்கு பின்னர் செல்போனில் தண்ணீர் உள்ளது இதன் காரணமாக வாரண்டியில் பழுது நீக்கி தர முடியாது என கூறியுள்ளனர். தண்ணீரில் விழாத செல்போனுக்கு உள்ளே எப்படி தண்ணீர் இருக்கும் switch on ஆகவில்லை என்று தான் உங்களிடம் கொடுத்துள்ளேன் என செல்போன் விற்பனை நிறுவனத்திடம் மீனா முறையிட்ட போதும் அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை.

மேலும் படிக்க | ‘Gay love Story’ எடுப்பது குற்றமா?- ‘RRR’க்கு ஆதரவாகக் கொந்தளித்த பாகுபலி புரொடியூஸர்!

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான மீனா தேனி மாவட்டம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த ஆணையத்தினர் புதிய ஆப்பிள் ஐ போன் 5s செல்போனை வழங்க வேண்டும் அல்லது அதற்கான தொகையை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தனர். சேவை குறைபாடு மற்றும் முறையற்ற வர்த்தக சேவைக்காக 50 ஆயிரம் இழப்பீடு, மேலும்  முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக 2 லட்சம் அபராதமும், இந்த தொகையை உத்தரவு நகல் பெற்ற ஒருமாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

மேலும்,  தவறும் பட்சத்தில் மனு தாக்கல் செய்த நாளில் இருந்து 9 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் எனவும், வழக்கு செலவு தொகையாக 8 ஆயிரமும் கட்ட வேண்டும். இந்த அபராத தொகை மொத்தமும் பூர்விகா செல்போன் விற்பனை நிறுவனம், பூர்விகா செல்போன் விற்பனை நிறுவனத்தின் தேனி கிளை மற்றும்  ஆப்பிள் இந்தியா பிரைவேட் நிறுவனமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆமா, இது ‘ED’ கூட்டணி ஆட்சிதான்! ஆனா... ‘பொடி’ வைத்துப் பேசிய பட்னாவிஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News