விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப்படத்திற்கு தலைவி' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கைப் படத்தின் தலைப்பு `தலைவி' என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்துக்கு 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக பணிபுரியவுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
மதன் கார்க்கி பாடல்கள் எழுத, விப்ரி மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. ஜெயலலிதா வாழ்க்கைப்படம் எடுப்பதற்காக அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு.
On the birth anniversary of #Jayalalithaa, producer Vishnu Induri announces title of #JayalalithaaBiopic: #Thalaivi... Directed by Vijay... Vijayendra Prasad, writer of #Baahubali and #BajrangiBhaijaan, will supervise the script... To be made in #Tamil, #Hindi and #Telugu. pic.twitter.com/QBShao26SP
— taran adarsh (@taran_adarsh) February 24, 2019
'தலைவி' படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.