அதிமுகவில் இருந்து வைத்திலிங்கம் நீக்கம்- தினகரன் அதிரடி

Last Updated : Aug 22, 2017, 01:45 PM IST
அதிமுகவில் இருந்து வைத்திலிங்கம் நீக்கம்- தினகரன் அதிரடி title=

அதிமுக அம்மா அணியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து வைத்திலிங்கத்தை நீக்கியாதாக டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். 

இரண்டாக இருந்த அதிமுக அணி இணைந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் தலைமைக் கழகத்தில் ராஜ்யசபா எம்பி வைத்திலிங்கம் கட்சியிலிருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

இந்த கருத்து அவரின் தனிப்பட்டது என்று ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜீ உள்ளிட்டோர் தெரிவித்தனர். 

இந்நிலையில் இன்று தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு எதிராக நடந்து கொண்டதால் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வைத்திலிங்கம் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

Trending News