திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் தலைமையில் பொன்னேரியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பளாராக திமுக கொள்கை பரப்பு செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கல்வியில் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி கலந்துகொண்டார்.
மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம் - தமிழக அரசு அனுமதி
அப்போது அவர் பேசுகையில், "ஓராண்டு சாதனையை நூறு ஆண்டுக்கு இணையான சாதனையை படைத்துள்ளார் தளபதியார். பெண்களுக்கு முதல் முதலில் ஓட்டு உரிமையை பெற்றுத் தந்தது நம் தாய் கட்சி நீதிக்கட்சி. பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக சொத்துக்களில் சம உரிமை வாங்கி கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
செருப்பை தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமூதாயத்தினரை மேயர் பதவியில் அமர வைத்தவர் முதல்வர் ஸ்டாலின்.
பெண்களுக்கு அரசியலில் 50 சதவிகிதமும் 21 மேயர்களில் 11 மேயர்கள் பெண்களாக நிலைநிறுத்தி காட்டி பெண் விடுதலைக்காக பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாரதியை போல ஆட்சி நடத்துகிறார்.
சென்னை செங்கோட்டைக்கு அருகிலேயே திராவிட கோட்டையான அறிவாலயத்தை டெல்லியிலே அறிவாலயத்தை நிறுவிய தலைவர்.
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தளபதி யாரை காட்டுகிறாரோ அவர்தான் இந்நாட்டின் பிரதமர்" என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் மதுரை சேவியர், மாவட்ட ஊராட்சி குழ தலைவர் உமா மகேஸ்வரி, பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் சுகுமார், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
மேலும் இவரது இந்த பேச்சு இணையதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | தஞ்சை பெரிய கோவில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR