தமிழ்நாட்டில் 100 ரூபாயை தொட்டது டீசல் விலை : அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம்

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை நிர்ணயத்திற்கு ஆதாரமாக இருக்கும் டீசல் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Mar 31, 2022, 11:23 AM IST
  • டீசல் விலை 100 ரூபாய்
  • பெட்ரோல் விலை 110 ரூபாய்
  • கச்சா எண்ணெய் விலை குறைகிறது
தமிழ்நாட்டில் 100 ரூபாயை தொட்டது டீசல் விலை : அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் title=

5 மாநில தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவந்த நிலையிலும் பல நாட்களாக பெட்ரோலியப் பொருட்களின் விலை உயராமல் இருந்து வந்தது.

5 மாநில தேர்தல் காரணமாக விலை உயராமல் இருக்கிறது. தேர்தல் முடிந்தபின் பெட்ரோல் விலை உச்சத்திற்கு போகும் என மக்கள் கவலையில் இருந்து வந்தார்கள். எதிர்பார்த்தது போலவே தேர்தல் முடிந்த சில தினங்களில் பெட்ரோல் விலை உயரத் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் விலை 9 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை; இன்றைய விலை நிலவரம்.!!

இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டின் கொடைக்கானலில் டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. பெட்ரோல் விலை அங்கு 110 ரூபாய் 32 காசுகள் விற்கிறது. கொடைக்கானல் மலைப்பிரதேசம் என்பதால் சமவெளியை விட சில பைசாக்கள் அதிகமாகவே அங்கு பெட்ரோலியப் பொருட்கள் விற்கப்படும். இதனால் இன்னும் சில தினங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் டீசல் விலை 100 ரூபாயை தொடும் அபாயம் உள்ளது.

மேலும் படிக்க | திமுகவுக்கு ஆஸ்கார் விருது : ஜெயகுமார் அறிவிப்பு..!

உக்ரைன் போர் சற்று தணிந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உலகளவில் குறைந்து வருகிறது. மற்றொருபுறம் ரஷியாவும் குறைந்த விலைக்கு இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்ய முன்வந்துள்ளது. ஆனாலும் பெட்ரோல் விலையை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைக்கு ஆதாரமாக டீசல் விலை இருந்து வருகிறது. இந்த விலையேற்றத்தால் காய்கறின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News