சென்னையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்படும் சுமார் 2000 கடைகளுக்கு சுகாதார துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக முழுவதும் டெங்குக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் சில இடங்களில் உள்ள 2000 கடைகளுக்கு சுகாதாரத்துறை அனுப்பிய நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில்,
நீர் தேங்குவதற்கு ஏதுவான டயர் உள்ளிட்ட கழிவு பொருட்களை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும். பழைய பொருள் அகற்றாவிட்டால், 6 மாத சிறைத்தண்டனை, ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.