கிசுகிசு : சூரிய கட்சி டார்கெட்.. பசை புள்ளிகள் மூலம் மாஜிக்கு தூது..!

Gossip, கிசுகிசு : சூரிய கட்சியை டார்க்கெட் வைத்திருக்கும் டெல்லி, கோட்டை தேர்தலுக்கு முன்னர் முன்னாள் மாஜியை பசையான ஆட்கள் மூலம் வளைக்க இரண்டு பிளான்களை வைத்திருக்கிறது. 

Last Updated : Aug 19, 2024, 11:12 AM IST
  • சூரியக்கட்சி இரண்டு பிளான்கள்
  • டெல்லி தொடங்கிய அடுத்த ஆட்டம்
  • இந்த பிளானில் தப்பிக்குமா சூரிய கட்சி
கிசுகிசு : சூரிய கட்சி டார்கெட்.. பசை புள்ளிகள் மூலம் மாஜிக்கு தூது..! title=

Gossip News Tamil : கோட்சூட் போட்டுக் கொண்டு வந்த குசும்பனை பார்த்த டீ மாஸ்டர், "என்னப்பா ஒரே கோட்சூட்டோட வந்திருக்கிறீர்?" என கேட்டார். "டெல்லிக்கு போய்ட்டு வந்தண்ணே, அங்கேயே நம்ம ஊரு பத்தின ஒரு அப்டேட் கிடைச்சுது. அதை சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்" என கும்பன் சொல்ல, அந்த கதையை கேட்க சூடாக ஒரு டீயை போட்டு அவனுக்கு கொடுத்தார் டீ மாஸ்டர். "அண்ணே, டெல்லி ஆப்ரேஷன் சூரிய கட்சி பிளானை மீண்டும் துளிர்க்கவிட்டு இருக்கு. இன்னும் 2 வருஷத்துக்குள்ள வர்ற கோட்டை தேர்தலுக்கு முன்ன அதை எப்படியாச்சும் செய்யனும்ங்கிறது தான் அவங்க பிளான். அதுக்காக அவங்க இப்போ இனிப்பு, கசப்பு ரெண்டு பிளான வச்சிருக்காங்க. இதுல ஹைலைட் எண்ணன்னுனா, ரெண்டையும் ஒரே நேரத்துல அப்ளை பண்ணப்போறாங்க. 

மேலும் படிக்க | கிசுகிசு : நடிகரின் மாநாட்டுக்கு தொல்லை கொடுத்த 2 கேபினட்டுகள்..!

இனிப்பான விஷயம் என்னன்னா, சூரியக் கட்சியோட இணக்கமாக போறது. ஏன்னா, இப்போவே மைனாரிட்டியா இருக்கிற நமக்கு சூரிய கட்சி கை இக்கட்டான நேரத்துல தேவைப்படலாம்னு டெல்லி நினைக்குது. அதனால, சில விஷயங்களில் ஒத்துபோகலாம்னு இறங்கி வர்ற ஆரம்பிச்சிருக்கு டெல்லி. கசப்பு மருந்து என்னன்னா, தங்களுக்கு நெருக்கமான பசை ஆட்கள் மூலம் சிறையில் இருக்கிற மாஜியோட மனச கரைக்கிற வேலையையும் டெல்லி தொடங்கியிருக்கு. அதுக்காக நீங்க எதிர்பார்க்கிற எல்லா ஆஃபரும் கொடுக்கிறோம்னு தூது விட்டுருக்காங்க. குறிப்பா கேஸ் விஷயத்துல எதிர்பார்க்குற எல்லாமும் செஞ்சு தர்றோம்னு சொல்லிட்டாங்களாம். 
நீங்க தான் இனி முடிவெடுக்கணும்னு சொல்லிட்டாங்களாம். கடைசியா, இந்த ஆஃபருக்கு ஒத்து வர்றலைன்னா, இப்போதைக்கு வெளியே வர்றத மறந்துடுங்கனு சொல்லப்பட்டிருக்காம்.

மாஜிக்கு வேண்டப்பட்டவங்க வழியாகவே இந்த விஷயமும் தூதா சொல்லப்பட்டிருக்காம். மாஜி தரப்பும் இதுகுறித்து ஆலோசனையில தான் இருக்காம். தேர்தலுக்கு இன்னும் 20 மாசத்துக்கு மேல இருக்கிறதால, இப்போ அவசரப்பட வேண்டாம்னு நினைக்கிறாராம். சூரியக்கட்சி இப்போது எல்லா சவுரியங்களோட பாத்துக்கிட்டாலும், சிறைக்கு வெளியே கொண்டு வர்றத்துல பொன்னானவருக்கு காட்டின முனைப்பு தனக்கு காட்டலையேன்னு கொஞ்சம் வருத்தமும் மாஜிக்கு இருக்காம்.

டெல்லியோ இவர நம்ம பக்கம் கொண்டு வந்துட்டா, இலைக்கட்சியிலயும் இன்னபிற கட்சிகளில் இருந்தும் முக்கிய புள்ளிகளை தூக்குவது எளிதா இருக்கும்னு நினைக்குதாம். அப்படி நடந்த கோட்டை தேர்தல்ல முதன்மை நாற்காலியே நமக்கு கிடைக்க வாய்ப்பு இருக்குனு இங்க இருக்கிறவங்க சொன்னதும் டெல்லிக்கு பிடிச்சுப்போனதால தான் இனிப்பு கசப்பு மருந்துகளை ஒரே நேரத்துல அப்ளை பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. எது வொர்க் அவுட் ஆனாலும் நமக்கு பிளஸ் என்பது தான் இப்போதைக்கு அவங்க கணக்கு. டெல்லியோட இந்த கணக்குல இருந்து சூரிய கட்சி எப்படி தப்பிக்கப்போகுது என்பது தான் அடுத்த பொலிடிக்கல் மெகா பிரேக்கிங்..!" என கேட்டு வந்த கதையை சுவாரஸ்யமாக முடித்துவிட்டு கிளம்பினான் குசும்பன். 

மேலும் படிக்க | கிசுகிசு : முதன்மையானவர் கொடுத்த எச்சரிக்கை - கலகத்தில் கேபினட்டுகள்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News