கமல்ஹாசன் அரசியல் மாநாட்டில் டெல்லி முதல்வர் பங்கேற்பு!

மதுரையில் நாளை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெறும் கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்.  

Last Updated : Feb 20, 2018, 08:53 AM IST
கமல்ஹாசன் அரசியல் மாநாட்டில் டெல்லி முதல்வர் பங்கேற்பு! title=

மதுரையில் நாளை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெறும் கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்.  

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இரண்டு நாட்களாக திமுக தலைவர் கருணாநிதி, ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த நிலையில் மதுரையில் நாளை நடைபெறும் கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்.  

Trending News