கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கன்னியாக்குமரி நாகர் கோவிலில் பகுதியில் ஓகி புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் மரம் விழுந்து நான்கு பேர் பலியகியுள்ளனர். தற்போது கன்னியாகுமரி அருகே உருவான ஓகி புயல் நகரத்தொடங்கி உள்ளது.
ஓகி புயலால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. காற்று பலமாக வீசி வருவதால் சாலைகளில் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னையிலும் மழை பெய்யத் தொடக்கி உள்ளது. நாளை மதியம் வரை மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.