பொறியியல் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல்கள் போல் வளர்ந்துவருகின்றன. 2010ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் பொது பிரிவினருக்கு (OC) 50 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கு 45 மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 40 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 35 மதிப்பெண்களாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் 2011-12ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான மதிப்பெண் முறையினை மாற்றி அமைத்தது.
இந்நிலையில் தற்போது 2019-2020 கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கான தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்து அரசாணை பிறப்பித்துள்ளது. அதில்,
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35-லிருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-லிருந்து 45 ஆகவும், பிசி, எம்பிசி, பிசி முஸ்லிம் ஆகிய பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45-லிருந்து 40 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே 2019 - 2020ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.