கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் எருமை மாடு மற்றும் பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் மேட்டுப்பாளையம் ரயில்வே கேட் பகுதி சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் இங்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.இங்கு 40 எருமை மாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் எருமைகள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது எருமைகள் மீது, யாரோ சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர்.
இந்த கொடூரமான தாக்குதலால், 20 க்கும் மேற்பட்ட எருமைகளுக்கு கடுமையான காயம் அடைந்துள்ளன. தாய் , கன்று என அனைத்து கால்நடைகளுக்கும் தலை பகுதி, முதுகு, கால் என அனைத்து பகுதிகளிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கால்நடை பராமரிப்பு துறையினர் மற்றும் வருவாய்த்துறை , காவல்துறை என அரசு அதிகாரிகள் அங்கு விரைந்து தற்போது அது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | விபத்தில் உயிரிழந்த நாய் - ஊர்முழுக்க இரங்கல் பேனர் அடித்து கண்ணீர் அஞ்சலி
ஆசிட் வீச்சின் காரணமாக, கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள மாடுகள், உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் எருமை மாட்டிற்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் புளுகிராஸ் மற்றும் மாவட்ட கால் நிர்வாகம் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபண்ணைக்கு உரிமையாளர்தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுமார் 30 லட்சத்திற்கு மேலாக, நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எருமைகள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது எருமைகள் மீது, யாரோ சிலர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ