பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டு பேருந்தை ஜப்தி செய்த ஊழியர்கள்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் பேருந்து நிறுத்தத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றி வந்த பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்.   

Written by - RK Spark | Last Updated : Nov 15, 2022, 12:17 PM IST
  • பேருந்து மோதி மாடுகள் உயிர் இழந்த விவகாரம்.
  • மாட்டு வண்டி உட்பட ஒட்டியவரும் காயமடைந்தார்.
  • பச்சமுத்துவிற்கு இழப்பீடு வழங்க உத்தரவு.
பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டு பேருந்தை ஜப்தி செய்த ஊழியர்கள்! title=

நெய்வேலி அருகே கொளப்பாக்கத்தை சேர்ந்த பச்சமுத்து என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நெய்வேலி அடுத்த அரசகுழி அருகே மாட்டு வண்டியில் சென்ற பொழுது திருச்சி கோட்டத்தை சேர்ந்த அரசு பேருந்து மாட்டு வண்டியின் மீது மோதியதில் இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. இதில் மாட்டு வண்டி முற்றிலும் சேதம் அடைந்தது மேலும் மாட்டு வண்டியை ஓட்டி வந்த பச்சைமுத்து காயமடைந்துள்ளார். 

bus

மேலும் படிக்க | சிறை வாசம் முடிந்தது... 30 ஆண்டுகளுக்கு பிறகு நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை

இந்த வழக்கு விருத்தாச்சலம் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பச்சமுத்துவிற்கு ஆறு லட்சத்து 47 ஆயிரத்து 717 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என திருச்சி கோட்ட அரசு பணிமனை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர். 

bus

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி போக்குவரத்து துறை அதிகாரிகள் இழப்பீடு வழங்காமல் அலை கழித்து வந்ததால் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி 27 பயணிகளுடன் வந்த அரசு பேருந்தை வேப்பூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு நீதிமன்ற ஊழியர்கள் திருச்சி கோட்ட பேருந்தை  ஜப்தி செய்தனர், இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர் பின்னர் அவ்வழியே வந்த வேறு பேருந்துகளில் பயணிகள் சென்றனர்.

மேலும் படிக்க | தமிழக மக்கள் எங்கள் மீது செலுத்திய அன்பிற்கு நன்றி: செய்தியாளர் சந்திப்பில் நளினி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News