சேலத்தில் ’சதுரங்க வேட்டை’.. லட்சக்கணக்கில் மோசடி..! இரவோடு இரவாக காலியான நகைக்கடை

சேலத்தில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி, சதுரங்க வேட்டை பட பாணியில் இரவோடு இரவாக கடையை காலி செய்து தப்பிச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:15 PM IST
  • சேலத்தில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி
  • இரவோடு இரவாக நகைக்கடை காலி செய்த தம்பதி
  • ஏலச்சீட்டு போட்டவர்கள் ஏமாற்றம்
சேலத்தில் ’சதுரங்க வேட்டை’.. லட்சக்கணக்கில் மோசடி..! இரவோடு இரவாக காலியான நகைக்கடை  title=

2014 ஆம் ஆண்டு வெளியான ’சதுரங்க வேட்டை’ திரைப்படம் மக்களை முட்டாளாக்கி விதவிதமாக ஏமாற்றும் மோசடி கும்பலின் கைவரிசைகளை பட்டவர்த்தனமாக அம்பலபடுத்தியது. அந்த திரைப்படம் வந்து சுமார் 7 ஆண்டுகள் ஆன பிறகும் மோசடி கும்பல்களின், தகிடு தத்தங்களுக்கு ஏமாறும் மக்களின் போக்கும் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. சேலத்தில் இப்போது அரங்கேறியிருக்கும் மோசடிசயும் சதுரங்க வேட்டையில் இடம்பெற்றிருக்கும் மோசடியே. ஏலச்சீட்டு, நகைச்சீட்டு எனும் பெயர்களில் மக்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்த மோசடி தம்பதி, இரவோடு இரவாக நகை மற்றும் பணத்தை சுருட்டிக்கொண்டு வெளியூருக்கு தப்பியுள்ளனர்.  

ALSO READ | கிரிப்டோ கரன்சி பேரில் மோசடி; பல லட்சம் ரூபாயை இழந்த வாலிபர்..!

சேலம், மன்னார்பாளையம் அருகே வசித்து வந்த தங்கராஜ் - லலிதா தம்பதி கடைவீதி ராஜகணபதி கோவில் அருகே லலிதாம்பிகை ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அந்தக் கடையில் ஏலச்சீட்டு மற்றும் நகைச்சீட்டு என நடத்தி வந்த அவர்கள், மக்களை கவரும் வகையில் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளனர். இதனை நம்பிய அப்பகுதியில் இருக்கும் ஏராளமான மக்கள், ஏலச்சீட்டு மற்றும் நகைச்சீட்டுகளை போட்டுள்ளனர். 

ஆனால், தங்களின் திட்டத்துக்கு ஏற்ப பணத்தை மக்களுக்கு கொடுக்க முடியாத அந்த தம்பதி, இரவோடு இரவாக நகைக்கடை காலி செய்துவிட்டு வெளியூருக்கு தப்பிச்சென்றுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததுடன், நகைக்கடையை முற்றுகையிட்டனர். பின்னர், பொன்னம்மாபேட்டையில் இருக்கும் தங்கராஜ் மாமனார் வீட்டை முற்றுகையிட்ட மக்கள், தாங்கள் செலுத்திய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அம்மாப்பேட்டை காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ALSO READ | OMR புட் கோர்ட் பெயரில் மோசடி; பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், நகைக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். அதில், நகைகள் மற்றும் பொருட்களை தங்கராஜ் தம்பதி எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டே இந்த மோசடியை அரங்கேற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக இருக்கும் தங்கராஜ் - லலிதா தம்பதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News