சென்னை: பள்ளிகளில் ஓமிக்ரான் வைரஸ் (Omicron Virus) தடுப்பு நடவடிக்கைகளை அரசின் வழிகாட்டுதலின்படி கட்டாயம் கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மிகவும் வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை (TN School) உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழக அரசால் (TN Govt) வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் குறித்து பார்ப்போம்.
1. முதலாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்
2. நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம்
3. பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக் கூடாது
4. ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்
ALSO READ | Omicron: WHO விடுத்துள்ள புதிய எச்சரிக்கை..!!
5 . மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்
6. வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
7. நீச்சல் குளங்களை மூட வேண்டும்
8. இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்
9. நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ALSO READ | ஓமைக்ரான் வைரஸ்: விமான நிலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR