2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில், விவசாய கடன் இலக்கு 11 கோடி, ஊரக கட்டமைப்பு மேம்பாடுக்கு 14.34 கோடி, டிஜிட்டல் இந்தியாவிற்கு 3,073, மகளிர் நல மேம்பாடுக்கு 1.21 லட்சம் கோடி, உணவு மானியத்திற்கு 1.69 லட்சம் கோடி, இரயில்வே துறைக்கு 1.48 லட்சம் கோடி என பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.
இதைக்குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவிடம் செய்தியாளர்கள் பட்ஜெட் தொடர்பான கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்த துரோகம் ஆகும். மக்களுக்கான எந்த ஒரு புதிய திட்டத்தையும் மத்திய அரசு செய்யவில்லை. தற்போது அவர்கள் கொண்டு வரும் அனைத்து திட்டமும் காங்கிரஸ் ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள். அதனை பெயர் மாற்றி தங்கள் திட்டம் போல் காட்டிக்கொள்கின்றனர் மத்திய அரசு.