அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் பெருங்காய டப்பா: La.கணேசன்

அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் என்ற பெருங்காய டப்பாவுடன் மற்றகட்சிகள் இணைவது சாத்தியமில்லாதது!!

Last Updated : May 20, 2019, 11:27 AM IST
அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் பெருங்காய டப்பா: La.கணேசன் title=

அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் என்ற பெருங்காய டப்பாவுடன் மற்றகட்சிகள் இணைவது சாத்தியமில்லாதது!!

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ஆம் நாள் நடைப்பெற்றது. தேர்தல் நடந்து முடிந்த 38 தொகுதிகளில் பாஜக-ஆதிமுக கூட்டணிக்கு 6 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 31 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் பாஜக-வின் கை ஓங்கி இருந்தாலும் தமிழகத்தில் பாஜக-வின் கை இன்னும் ஓங்கவில்லை என்பதை இந்த தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் என்ற பெருங்காய டப்பாவுடன் மற்ற கட்சிகள் இணைவது சாத்தியமில்லாதது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " தமிழக கருத்துக் கணிப்பில் திமுக பெருமைப்பட ஒன்றுமில்லை என்றும் தமிழகத்தில் 2 இடங்களில் வெற்றி பெற்றாலும் அது பாஜகவுக்கு கிடைத்த முழு வெற்றி தான் எனவும் தெரிவித்தார். மேலும், அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் என்ற பெருங்காய டப்பாவுடன் மற்ற கட்சிகள் இணைவது சாத்தியமில்லாதது என கூறினார். 

விளை நிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிக்கப்படுவதற்கு முந்தைய அரசு அனுமதி கொடுத்தது தான் காரணம் என குறிப்பிட்ட அவர், நிலத்தடியில் எரிபொருள் கிடைக்கிறதா என ஆய்வு செய்யலாம் என்ற முடிவை பிரதமர் எடுக்கவில்லை என்றும், அந்நிய நாடுகளிடம் எரிபொருள் வாங்கும் நிலையை மாற்ற வேண்டும் என்றுதான் பிரதமர் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

 

Trending News