பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது கைது குறித்து வெளியாகியிருக்கும் முதல்கட்ட தகவலில், பெண் காவல்துறையினரை அவதுறாக சமூக ஊடகங்களில் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேனியில் இருந்த அவரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யார் இந்த சவுக்கு சங்கர்?
அரசு வேலையில் இருந்த சங்கர், கடந்த திமுக ஆட்சியின்போது ஒலிநாடவை லீக் செய்த புகாரில் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், சங்கர் அவரின் அரசுப் பணியில் பணியிடை நீக்கப்பட்டதாகவே கருதப்பட்டு வந்தார். 2021 ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சங்கர் அவருடைய அரசுப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதேநேரத்தில் எக்ஸ் வலைதள பக்கம், யூடியூப் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக அரசு மற்றும் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். அத்துடன் காவல்துறை உயர் அதிகாரிகளையும் சவுக்கு சங்கர் விமர்சித்தார்.
மேலும் படிக்க | பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ஆம் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை
காவல்துறையினர் மீது அவதூறு
இதனால் இவர் மீது அரசு அதிகாரிகள் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். சவுக்கு சங்கரின் சில விமர்சனங்கள் தரம் தாழ்ந்தும், ஒருதலைப்பட்சமாகவும் இருந்ததாகவும் விமர்சிக்கப்பட்டு வந்தது. இது சர்ச்சையாகவும் உருவெடுத்தது. குறிப்பாக காவல்துறையில் இருக்கும் சிலர் குறித்து தொடர்ச்சியாக சில தனிப்பட்ட விவகாரங்களை குற்றச்சாட்டுகளாக வெளியிட்டு வந்தார். ஒரு பேட்டியில், பெண் காவலர்களை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனால் சவுக்கு சங்கரை கைது செய்ய காவல்துறையில் இருப்பவர்கள் கடந்த சில மாதங்களாகவே காய்களை நகர்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
சவுக்கு சங்கர் கைது
அதன் ஒருபகுதியாக கடந்த சில நாட்களாக சவுக்கு சங்கருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களை காவல்துறை குறி வைத்தது. அவர்கள் மீது இருந்த மோசடி புகார் உள்ளிட்டவற்றில் அவர்களை கைது செய்தது. ஒரு சில நபர்கள் காவல்துறையின் கைதுக்கு அஞ்சி தலைமறைவானதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து சவுக்கு சங்கர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எழுதிய பதிவில், தனக்கு சொந்தமான மீடியாவில் பணியாற்றும் இளைஞரை அவருடைய தனிப்பட்ட விவகாரத்தை அறிந்து, அதனை வைத்து கைது செய்ய முற்படுவதாகவும் எழுதியிருந்தார். இந்த சூழலில் தான் சவுக்கு சங்கர் தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யபட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | கடன் தொல்லை, பள்ளிபாளையத்தில் மீண்டும் கிட்னி விற்பனை! பேரதிர்ச்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ