விடுதலைவீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

Freedom Fighter Death Anniversary: உயிர் போகும் வேளையிலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத விடுதலைவீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் புகழ்வணக்கம்!  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 3, 2022, 12:53 PM IST
  • விடுதலைவீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாள்
  • உயிர் போகும் வேளையிலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத விடுதலைவீரர் தீரன் சின்னமலை
  • விடுதலைவீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் புகழ்வணக்கம்
விடுதலைவீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் title=

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மரியாதை செலுத்தினார். தாயகத்தின் மானத்துக்கு இழுக்கு நேர்ந்தபோது, தன்னுரிமை மிதித்துத் துவைக்கப்படும்போது, "சின்னமலை வரிதரமாட்டான்! ஆங்கிலேயருக்கு அடிபணிய மாட்டான்!" என முழங்கி, உயிர் போகும் வேளையிலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத விடுதலைவீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்! என்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்கள் முழங்கி, அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் டிவிட்டர் பதிவும் வெளியிட்டுள்லார்.

சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன் அருகே அமைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் எ. வ. வேலு, மா. சுப்ரமணியன், சேகர்பாபு, செந்தில்பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயே ஆட்சியை எதிர்த்து விடுதலைக்காக போராடியவர்களில் தீரன்சின்னமலை குறிப்பிடத்தக்கவர். கிழக்கிந்திய கம்பெனியினரின் ஆதிக்கத்தை விரும்பாமல் தொடர்ந்து எதிர்த்து போராடி வந்த தீரன் சின்னமலையை  ஆங்கிலேயர்கள்  தூக்கிலிட்டனர்.

மேலும் படிக்க | சாமானிய மக்களுக்கு உதவ மத்திய அரசுக்குத்தான் வாய்ப்பு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தீரன் சின்னமலையின் தியாகத்தைப் போற்றி நினைவு கூறும் வகையிலும் அவரது வீரதீர செயல்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையிலும் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அப்போது கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார் உட்பட ஏராளமான நிர்வாகிகளும் உடன் இருந்தனர். 

பின்னர், அமமுக சார்பில் டிடிவி தினகரன், காங்கிரஸ், பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், கரு.நாகராஜன்,பாமக சார்பில் ஏ. கே. மூர்த்தி,நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் தீரன்சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும் படிக்க | மாணவி உயிரிழப்பு - முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News