ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 90 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் இன்று 90 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதை நடத்தி வைக்க சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையேற்று தாலி எடுத்துக் கொடுத்து நடத்திவைத்தனர்.
இதில், அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். ஏராளான சீர்வரிசையுடன் விமரிசையாக நடைபெற்ற திருமணத்தில் அரசின் நலத்திட்டங்கள், எட்டு வழிச் சாலை உள்ளிட்ட திட்டங்களை விளக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் திட்டங்களை விளக்கி பேசினார்.
To mark the 70th birthday of the Honorable itayateyvam Puratchi mother, Krishnagiri Jameel puratcittalaivar City Stadium, by airing the Association of the families of the marriage ceremony of 90 couples ... pictwittercomjQK2n5gT5b
- Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 1, 2018