பாசனத்திற்காக வைகை அணை திறக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது...
மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதி III மற்றும் வைகை பூர்வீக பாசனப் பகுதி II-ல் உள்ள 5 கண்மாய்களுக்கு 14.11.2018 முதல் 21.11.2018 வரை, 7 நாட்களுக்கு 1525 மில்லியன் கனஅடியும், இதர வைகை பூர்வீக பாசனப் பகுதி II-க்கு 23.11.2018 முதல் 27.11.2018 வரை 4 நாட்களுக்கு 631 மில்லியன் கனஅடியும், பகுதி I-யை சார்ந்த நான்கு கண்மாய்களுக்கு 28.11.2018 முதல் 30.11.2018 வரை இரண்டு நாட்களுக்கு 69 மில்லியன் கன அடி, விரகனூர் மதகணையில் வழங்கவும், இதர வைகை பூர்வீக பாசனப் பகுதி I-க்கு 348 மில்லியன் கன அடி தண்ணீரை பகுதி I-இல் உள்ள நிலையூர் கால்வாயில் தேவைக்கேற்ப திறந்து விடுவதற்கும் சேர்த்து வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்!