புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்தார் EPS..!

நெல்லையில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!

Last Updated : Nov 22, 2019, 11:21 AM IST
புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்தார் EPS..! title=

நெல்லையில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!

தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி இன்று உதயமாகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்கும் நிகழ்ச்சி தென்காசியின் இன்று நடந்தது. புதிய மாவட்டத் தொடக்க விழா தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் பழனிசாமி தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்து மக்களுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  26 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை என 2 கோட்டங்களையும், 8 தாலுக்காக்களையும், சங்கரன் கோவில், ஆலங்குளம் உட்பட 5 தொகுதிகளையும் உள்ளடக்கியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தென்காசி ஆயிரப்பேரியில் சுமார் 37 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. 

தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டசபைகள் அடங்கும். 

 

Trending News