GReaT Shef: மகளிரை கொண்டாடும் சமையல் போட்டி... செஃப் தாமுவும் பங்கேற்பு!

GReaT Shef 2024: சென்னை தனியார் நட்சத்திர ஹோட்டல் சார்பில் நடத்தப்பட்ட பெண்களுக்கான சமையல் போட்டியில், பிரபல செஃப் தாமு போட்டியாளர்களுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டினார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 9, 2024, 11:09 PM IST
  • மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த போட்டி நடத்தப்பட்டது.
  • மார்ச் 5ஆம் தேதி மற்றும் மார்ச் 7ஆம் ஆகிய தேதிகளில் இப்போட்டி நடைபெற்றது.
  • இதன் வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
GReaT Shef: மகளிரை கொண்டாடும் சமையல் போட்டி... செஃப் தாமுவும் பங்கேற்பு! title=

GReaT Shef 2024, Women Cookery Competition: நாம் பல இடங்களுக்கு சுற்றுலா செல்லும் போதோ அல்லது பணி நிமித்தமாக வெளியூரில் தங்கியிருந்தாலோ ஹோட்டல்களில் அதிகளவு உணவு உண்ணும் சூழல் ஏற்படும். அங்கு ரூசியான உணவுகளை சாப்பிட்டிருப்பீர்கள், உடனே உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினர்களுக்கோ அந்த ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் பரிந்துரைப்பீர்கள். இது அந்த உணவுக்கும், அந்த ஹோட்டலுக்கும் அளிக்கப்படும் மிகப்பெரிய கௌரவமாகும்.

'GReaT Shef'

ஆனால், நாம் எத்தனை பேர் வீட்டில் நம் பெண்களின் சமையலை கௌரவத்திருப்போம்...? அந்த வகையில், சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த மார்ச் 5ஆம் தேதி மற்றும் மார்ச் 7ஆம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேதிகளில் வீட்டு சமையல் நிபுணர்களை கெளரவிக்கும் வகையில், பெண்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது.

குறிப்பாக, இந்த சமையல் போட்டி அந்த தனியார் நட்சத்திர ஹோட்டல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. 'வீட்டில்  சமைப்பவர்கள் சமையல் குறிப்புகளை தாண்டி சமையல் ஒத்திசைவுகளை  உருவாக்குகிறார்கள்'   என்கிற யோசனையின் அடிப்படையில் உருவானதே இந்த பிரமாண்ட GReaT Shef சமையல் போட்டியாகும்.

இறுதிப்போட்டியில் 7 பேர்...

இதில் 50 பெண்கள் முதலில் ஒரு சிறப்பு குடும்ப சமையல் செய்முறையை செய்து நடுவர்களுக்கு வழங்கியதோடு, ஏன் அந்த  குறிப்பிட்ட உணவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்கிற தகவலையும் வெளிப்படுத்தினர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள், நேரடி சமையல் சவாலில் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

மேலும் படிக்க | மகளிர் தினம் கொண்டாடப்படுவது ஏன்? இதனால் யாருக்கு என்ன பயன்?

கிராண்ட் சென்னை, கிராண்ட் விஜயவாடா மற்றும் கிராண்ட் காக்கிநாடாவில் உள்ள கார்டன் கஃபே மற்றும் கிராண்ட் காக்கிநாடாவில் உள்ள எக்லக்டிக் பஜார் உணவகங்களின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் கின்னஸ் சாதனை படைத்த செஃப் தாமு போட்டியாளர்களுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டினார். 

GReaT Shef 2024: வெற்றியாளர்கள்...

போட்டியின் இறுதியில் சென்னையை சேர்ந்த லோகேஸ்வரி வெற்றி வாகை சூடினார். 2ஆம் பரிசை ஒரிசாவை சேர்ந்த ரஷ்மிதா நாயரும், மூன்றாம் பரிசுகளை சென்னையை சேர்ந்த பிஸ்மோல், கோவையை சேர்ந்த சசி, கன்னியாகுமரியை சேர்ந்த பாத்திமா ஆகிய மூவரும் வென்றனர். 

போட்டி ஏற்பாடு செய்யமூத்த பொது மேலாளர் மோனிதீப் ஜாஸ் இந்த நிகழ்வைப் பற்றிப் பேசுகையில், “இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்காக, வித்தியாசமான மற்றும் தனித்துவமான ஒன்றைச் செய்ய முடிவு செய்து இந்த போட்டியை நடத்தப்பட்டது. வீட்டு சமையல்காரர்களுக்கு அவர்களின் திறமைகளை வெளிக்காட்ட ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பினோம்" என்றார்.

மேலும் படிக்க | பிரதமரின் 'நமோ ட்ரோன் திதி யோஜனா' திட்டத்தில் 1000 மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News