4 நாட்களில் மட்டும் தலைக்கவசம் அணியாத 15,500 பேர் மீது வழக்கு பதிவு

கடந்த நான்கு நாட்களில் மட்டும் 15,545 பேர் மீது தலைகவசம் அணியாமல் வாகன ஓட்டியதாக வழக்குகள் பதிவு செய்துள்ளது சென்னை போக்குவரத்து போலீஸ் துறை

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 11, 2019, 03:37 PM IST
4 நாட்களில் மட்டும் தலைக்கவசம் அணியாத 15,500 பேர் மீது வழக்கு பதிவு title=

சென்னை: கடந்த நான்கு நாட்களில் மட்டும் 15,545 பேர் மீது தலைகவசம் அணியாமல் வாகன ஓட்டியதாக வழக்குகள் பதிவு செய்துள்ளது சென்னை போக்குவரத்து போலீஸ் துறை

கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், வாகன ஓட்டிகள் தலைகவசம், சீட் பெல்ட் அணியாத காரணங்களால் தான் 70 முதல் 90 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதையும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதையும் கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழககத்தில் தலைகவசம் அணிபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பியதோடு, தலைகவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ஏன் தீவிரமாக அமல்படுத்தவில்லை. அரசாணையை மட்டும் பிறப்பித்து விட்டு அரசு அமைதியாக இருக்கக் கூடாது என கடுமையாக சாடினார்கள். இதுக்குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறியது. 

இதனையடுத்து நீதிமன்றத்தில் அரசு தரப்பில் விளக்கம் அழிக்கப்பட்டது. அதில் தலைக்கவசம் அணிவது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும், சட்டவிரோதமாக இருசக்கர வாகனப் பந்தயங்களில் ஈடுபடுபவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தலைக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.100 மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை அதிகரிப்பதற்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. மோட்டார் வாகனச் சட்ட விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படுகின்றன என அரசு தெரிவித்தது.

இந்தநிலையில், சென்னையில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியதாக சுமார் 15,543 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Trending News