குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக சென்னையில் நேற்று மாலை வரை கன மழை பெய்து ஒய்ந்திருக்கிறது இதன் காரணமாக பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக சுரங்கபாதைகளில் நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் தொடர்ந்து மோட்டார்கள் நீர் வெளியேற்ற பணிகளும் நடந்து வந்ததால் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சுரங்கபாதைகளில் போக்குவரத்தை நிறுத்தி அறிவிப்பு செய்தது.
பணிகள் முற்றிலும் முடியாத நிலையில் சென்னையின் பிரதான சுரங்கப்பாதையான அரங்கநாதன் சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கியதால் யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தி போக்குவரத்து நிறுத்தப்பட்திருந்தது. இந்நிலையில் இன்று காலை போரூரிலிருந்து மந்தவெளிக்கு செல்லும் தடம் எண் 12M பேருந்து மழை காரணமாக (Heavy Rain) மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுதியிருந்த போதும், இன்று காலை வழக்கமான பாதையான அரங்கநாதன் சுரங்கப்பாதை வழியாக செல்ல முற்பட்டபோது சுரங்கப்பாதையின் மையப்பகுதியில் அதிகளவு நீர் தேங்கியிருத்ததால் பேருந்து நீரில் சிக்கிக்கொண்டது.
ALSO READ | வெள்ள சேதத்திலிருந்து உங்கள் காரை காக்க சில முக்கிய டிப்ஸ் இதோ..!
இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தில் இருந்த 5 பயணிகள் உட்பட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை படகு மூலம் மீட்டனர் பின்பு பேருந்தை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னதாக இந்த சுரங்கபாதையில் நிரம்பியிருந்த மழைநீரானது நேற்று மாலையுடன் மழை சற்று ஓய்திருந்ததால் நீர் வடிந்து காணப்பட்டதால் பேருந்தின் ஓட்டுநர் தடுப்புகளை அகற்றி சுரங்கபாதையில் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து மாநகர போக்குவரத்து அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு பேருந்தை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
2015 ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழைநீர் பாதிப்பின் போது இதே அரங்கநாதன் சுரங்கபாதையில்தான் பேருந்து ஒன்று சிக்கிக்கொண்டது அதன் பின்பு தற்போதும் பேருந்து சிக்கியிருப்பதும், 2015 மற்றும் 2021 சென்னை மழை வெள்ளத்தில் அரங்கநாதன் சுரங்கபாதையில் மட்டுமே பேருந்து சிக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ | சென்னை பிரதான சாலையில் தொடர்ந்து ஏற்படும் ராட்சத பள்ளங்கள்: பொதுமக்கள் அச்சம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR