பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவு 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே அனைவரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் சாலையில் வாகனங்களை வேகமாக இயக்கிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும், இது விபத்துகள் அதிகரிக்க வழிவகை செய்யும் எனவும் விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு குறித்து விளக்கமளித்துள்ள சொமேட்டோ நிறுவன தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் 10 நிமிட டெலிவரி சேவை என்பது குறிப்பிட்ட இடங்கள், குறிப்பிட்ட உணவு பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவித்தார். மேலும் உணவை சீக்கிரம் டெலிவரி செய்ய வேண்டுமென தங்களது நிறுவனம் எந்தவித அழுத்தமும் அளிக்கவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் படிக்க | Zomato Insta: குழப்பமே வேண்டாம்! 10 நிமிடத்தில் என்னவெல்லாம் கிடைக்கும்..!!
இந்த அறிவிப்பு குறித்து விமர்சித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், உணவு டெலிவரி சேவைகளை முறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். உணவு டெலிவரி ஊழியர்கள் தங்களது சொந்த வாகனத்தை பயன்படுத்துவதால் விபத்து ஏற்படும்போது அவர்களுக்கு காப்பீடு கிடைப்பதில் சிரமம் உள்ளதாக கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிக எடையை சுமந்து செல்வதால் டெலிவரி ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து போலீஸ் விளக்கம் கேட்டுள்ளது. 10 நிமிடத்தில் டெலிவரி செய்ய வேண்டுமென ஊழியர்கள் அதிக வேகத்தில் செல்வதோடு, விதிமீறல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து முழுமையான விளக்கம் கேட்கப்படுமென சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | Zomato Instant: இனி 10 நிமிடங்களில் உணவை டெலிவரி; அசத்தும் Zomato
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR