வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தில் கஜா புயல் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை மோசமாக தாக்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகள் அதிக அளவில் சேதத்தை சந்தித்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.