அதிமுக விவகாரம்; தலைமை நீதிபதி சொன்ன பதிலால் ஓபிஎஸ் அணி அதிர்ச்சி

அதிமுக பொதுக்குழு  தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியிருக்கும் கருத்து ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 3, 2022, 06:33 PM IST
  • உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் முறையீடு
  • தனி நீதிபதியிடம் இருந்து வழக்கை மாற்றக் கோரிக்கை
  • கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி
அதிமுக விவகாரம்; தலைமை நீதிபதி சொன்ன பதிலால் ஓபிஎஸ் அணி அதிர்ச்சி  title=

அதிமுக பொதுக்குழு  தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென்ற ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கைக்கு விளக்கம் கொடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தனி நீதிபதியான நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிப்பிக்கப்படும் என  கூறியுள்ளார். 

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.  அப்போது, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது  எனக் கூறி அவர்கள் தொடர்ந்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது. 

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற மனு தாக்கல்

அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நாளை பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கடந்த ஜூலை 11-ல் பிறப்பித்த உத்தரவில், பன்னீர்செல்வம் குறித்து தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்துள்ளதால்,  பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. 

இந்த விவகாரம் குறித்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதி முன்பாக வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி முறையீடு செய்தார். அதனை கேட்ட் தலைமை நீதிபதி,  வழக்கை ஒரு நீதிபதியிடம் இருந்து மற்றொரு நீதிபதிக்கு மாற்றுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும் இருவரின் கடிதங்களையும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியுடன் ஆலோசித்து, அவரது கருத்தையும் அறிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | இப்போ எடப்பாடி பழனிச்சாமி.. அடுத்து வேலுமணி! இனி தான் ஆரம்பம் -ஆர்.எஸ்.பாரதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News