சென்னையிலுள்ள முகப்பேர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பணிபுரிபவர் ஸ்ரீதர் ராமசாமி. இவர் அப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கு வேதியல் பாடம் எடுத்து வருகிறார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால் அனைத்து மாணவ- மாணவியரின் எண்களையும் ஆசிரியர்கள் பெற்று வைத்திருக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ஆசிரியர் ஸ்ரீதர் ராமசாமி மாணவிகளின் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பத்தொடங்கியுள்ளார்.
ஆசிரியர் ஆயிற்றே என்று பயந்து பதற்றத்துடன் பதிலளிக்க ஆரம்பித்த மாணவிகளை தன் வளையில் சிக்கவைத்தார் ஸ்ரீதர். அதேபோல் அவர் மாணவிகளிடம் அத்துமீறி பேசி வெளியே செல்வோமா என்று கேட்டும் உள்ளார்.
மேலும் படிக்க | கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்! - விஜய், அஜித்துக்கு எத்தனையாவது இடம்?
சில மாணவிகள் இவரை நம்பி, அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவருடன் வெளியேவும் சென்றுள்ளனர். இவ்வாறு பல முறை நடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மாணவிகளை அழைத்துச்சென்றது மட்டுமில்லாமல் அவர்களிடம் தகாத முறையிலும் நடந்துக்கொண்டதாக தெரிகிறது.
ஒரு அளவுக்கு மேல் சகித்துக்கொள்ள முடியாத மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். பின்னர் இது குறித்து பெற்றோர் குழந்தைகள் நலத்துறை காவலர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளுடன் பேசிய வாட்ஸ் ஆப் பதிவுகளும், ஆடியோ பதிவுகளும் விசாரணையில் வெளியாகியுள்ளன. மேலும், இந்தக்குற்றச்சாட்டை உறுதி செய்யும் நோக்கில் ஆசிரியர் ஸ்ரீதரிடமும், சம்பந்தப்பட்ட மாணவிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை மாநகரின் முக்கிய பகுதியில் செயல்படும் அரசு மகளீர் பள்ளியிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | சோனியா காந்தியின் 71 வயது உதவியாளர் மீது இளம்பெண் பாலியல் புகார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR